4.T.t.Mayuran,
No 7/6 1st lane,
Brown Road,
Jaffna.
20.11.2001.
தங்களின் ‘கனவுகளின் எல்லை’ – கவிதை நூல் வாசித்தேன்.
எங்கள் நிகழ்காலத் தேசத்தின் நிஜங்களை உணர்த்தி நிற்கும் உம் கவிதைத் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையும் காதலுடன் வாசிக்கத்தக்கவை. பண்பாட்டையும், சூழலையும் பாடுபொருளாகக் கொண்டு நீர் பாடிய ஒவ்வொரு கவிதையிலும் உயிரோட்டம் இருப்பது உணரக்கூடியதாக உள்ளது!
ஒவ்வொரு படைப்பாளிக்கும் இது போன்ற நிஜங்கூறும் விமர்சனங்கள் அவனின் ~வினைத்திறனை| இன்னன்னும் அதிகரிக்கச் செய்யும் என்ற அர்த்தத்தில் இம்மடலை ஆக்குகின்றேன். சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வரும்போது மிகுதி விமர்சனம் குறித்து சிந்திப்போம்!!
~வளர்க நின் கவிதா தாகம்!
வாழ்க நின் இலக்கிய மோகம்!!|