கைகளுக்குள் சிக்காதகாற்று – க.சொக்கன்(சொக்கலிங்கம்)

நூல் வரிசை :கைகளுக்குள் சிக்காதகாற்று மூத்ததமிழறிஞர். க.சொக்கன்(சொக்கலிங்கம்)

இலக்கியவகைகளில் மிகப் பழமையானதம் அதேசமயம் மிகப் புதுமையானதம் கவிதையேஎன்பதையாவரும் ஏற்பர்.வீச்சும் விறலும் வேகமும் தாகமும் நிறைந்தகவிதைகள் பெரும் எண்ணிக்கையில் இன்றுவெளிவருவதுமகிழ்ச்சிதரும் செய்தியாகும்.மரபுக் கவிதையின் எண்ணிக்கைகுறைந்தம் புதுக் கவிதையின் தொகை கூடியும் வரும் ஒருகாலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தநிலைவரவேற்கத் தக்கதாஎன்றவினாஒருபுறமிறக்க…இவ்விருவடிவங்களையும் கையாளுந் திறமைபெற்றகவிஞர் சிலராவதுஎம்மிடம் உள்ளனர் என்பதுநிச்சயம் ஆறுதல் தருவதுதான்.இந்தச் சிலரின் வரிசையிலேகுறிப்பிடத்தக்கஒருவராக இளங்கவிஞர் த.ஜெயசீலன் இடம்பெறுகிறார்.அவரின் முதலாவதுகவிதைத் தொகுதியைத் தொடர்ந்து‘கைகளுக்குள் சிக்காதகாற்று’என்ற இரண்டாவதுகவிதைத் தொகுதிஅண்மையில் வெளியாகியுள்ளது.

“நமக்குத் தொழில் கவிதை
என்றானேதீக்கவிஞன்..

எனக்குத் தொழிலல்ல…எனக்குஅதுஉயிராம்”என்றுகவிதையின் படைப்பிலேயெஉயிர்த்துவிளையும் ஜெயசீலன்.அதுதன்னுள் ‘நிரந்தரியாக’நின்றிடவரம் வேண்டும் எனவேண்டிநிற்பதுஅவரின் உணர்வுபூர்வமானபக்திநிலைப்பாட்டைப் புலப்படத்துவதுகுறிப்பிட்டுக் கூற வேண்டியதாகும்.

இவ்வாறுதாம் வேண்டியவரத்தில் தமக்குக் கிடைத்தது‘கவிதையெனும் அண்டத்தின் சிறுதுகளே’என்கையில் அவரின் தன்னடக்கமும் புலப்படத் தவறவில்லை. “தன்னைத் தாழ்த்துபவன் என்றோஓர்நாள் உயர்த்தப்படுவான்”என்ற கூற்று ஜெயசீலனைப் பொறுத்தவரைநிறைவேறியேதீரும் என்றநம்பிக்கைஅவரின் இந்தக் கவிதைத் தொகுதியிலும் பல இடங்களிலேபுலப்படக் காண்கிறோம்.எல்லாமாகச் சிறியனவும் பெரியனவுமாகஎழுபத்தேழுகவிதைகள் இந்நூலில் இடம்பெறுகின்றன.

இவர்தம் கவிதையின் எல்லையும் பரப்பும் மிகவிசாலமானவை.பலவற்றையும் தொட்டும் தடவியும் தாக்கியும் தணிந்தும் சிலவேளைகளில் அமைதியோடுநகரும் சிற்றாறாகவும் சிலவேளைகளிலேகரையையெல்லாம் அடித்துப் பாயும் காட்டாறாகவும் அவைவிளங்குகின்றன.மனிதத்தின் பல்வேறுஉணர்ச்சிகளைத் தடம்கண்டுபுலப்படுத்தும் ஆற்றல் விகசிக்கின்ற இடங்களும் நெஞ்சைத் தொடுவனவாயுள்ளன.

கற்பனையின் வேகத்தில் எழுகின்றஉவமானங்களும் ஜெயசீலனுக்குகைவந்தகலைஎன்பதற்கு“கோவிலடி(நல்லூர்)

வீதிஏதோபரவசத்தைஎமக்கூட்டும் அன்னைமடி”
“வேம்பின் கீழிருந்துமணலெண்ணும் பொன்முற்றம்”
“எழில்பூக்கும் அருள்விருட்சம்”என்பனதொட்டுக் காட்டவேண்டியஅழகுகள்.
“அந்திசரியஅசைந்துவரும் இராகவிய
“அந்தரங்கள் அற்றுஆறவரும் நண்பருடன்
நேரம் நகர்வதனை
நினையாமற் கதையளக்கும்
நிம்மதிப் பூங்கா”என்றஅடிகளில் எதார்த்தத்தோடு‘இராகவிய’,‘நிம்மதிப் பூங்கா’ஆகியசொல்லாட்சிப் புதுமைகளும் இரசிகஉணர்வுகளுக்குநல்லவிருந்துகள்.

வீட்டுக்குள் வந்தவிடுகின்றஅனாதைநாய்களையும் பூனைகளையும்ஓட்டிக்கலைக்கின்றமுதுமைபற்றியஎண்ணம் தனக்குள்ளேஎழுகையில்அவைசிலகணங்கள் தன்னைவதைக்கையில் முதியவன் ஒருவன் அடைகின்றவேதனை,வெப்பிசாரங்கள் கவிஞரின் படிமப் படைப்புகளுக்குஎடுத்துகாட்டுகளாகப் ‘பழி;’என்றகவிதையில் இடம்பெறுவதும் சிந்தனையைத் தூண்டுவதாய் உள்ளது.

நூற்றுப்பத்துப் பக்கங்களில் அழகியமுகப்புச் சித்திரத்தோடு கூடி அட்சரம் நூறுபெறும் கவிதைகளைஉள்ளடக்கிவிளங்கும் ‘கைகளுக்குள் சிக்காதகாற்று’மெல்லியதென்றலாகவாசகரிடையேவீசிஅவர்களின் நெஞ்சங்களைத் தடவிமகிழ்வூட்டும் என்பதற்குஐயமில்லை.

(இது 24.04.2004 ம்திகதியஉதயன் பத்திரிகையில் ‘நூல்வரிசை’பகுதியில் வெளிவந்தது)

Leave a Reply