அண்மைக் காலங்களில் தமதுகவிதைகள் வாயிலாகதம்மை இனங்காட்டிவருகின்றகவிஞர்களுள் ஒருவர் த.ஜெயசீலன். அவரது‘கனவுகளின் எல்லை’(2001) என்றகவிதைத் தொகுதிஅண்மையில் வெளிவந்துள்ளது. புதுக் கவிதைஎன்றபெயரில் பெரும்பாலும் வசனங்களையேபார்த்துச் சலித்துவிட்டகண்களுக்கும்,மனதுக்கும் (புதுக் கவிதைக்குநான் வில்லன் அல்லன்) இத்தொகுதிசற்றுவித்தியாசமாகத் தெரிகிறது.
கவிதைகள் அடிப்படையில் இரு வகைப்பட்டவை. ஓசையைஅடிப்படையாகக் கொண்டவைஒருவகை. ஒத்திசைவைஆதாரமாகக் கொண்டவை இன்னொருவகை. கவிதைகள் ஓசையையோஅல்லதுஒத்திசைவையோஅடிநிலையாகக் கொண்டிருக்கலாம். ஆனால் அவைகவிதைகளாகவிளங்குமாறுபார்த்துக் கொள்வதுகவிஞர்களின் பொறுப்பு.
இவ்வகையில் ஓசைவழிப்பட்டகவிதையை இலங்கையில் மஹாகவி,முருகையன்,நீலாவாணன்,எம்.ஏ.நுகுமான்,சில்லையூர் செல்வராசன்,புதுவை இரத்தினதுரை,உட்படக் கணிசமானோர் வளர்த்துவந்துள்ளனர். இத்தகையபரம்பரையில் ஒருவராகவும்,தன்னம்பிக்கையும் திறமையும் கொண்டகவிஞராகவும் வளர்ந்துவருபவர் ஜெயசீலன்.
இத்தொகுதியிலுள்ளஅவரதுகவிதைகள் அவரின் ஊர்,அவரதுகவிதை,போர்ச்சூழல்,காதல், இயற்கை, இறையுணர்வு,மனிதத்துவம்,தத்துவவிசாரம் எனப் பல்வேறுபட்டகருப்பொருள்களைஉள்ளடக்கியுள்ளன.
கவிதைத் துறையில் ஜெயசீலனின் வளர்ச்சிக்குக் காரணமாகவிருப்பதுகவிதைப் பொருளோடுஉணர்வொன்றிக் கலைத்துவத்தோடுஅதனைஅவர் வெளிப்படுத்துவதுதான். பொதுவாகவேஅவரின் சகலகவிதைகளிலும் இத் தன்மையைக் காணலாம். அவரின் கவிதைகள் இயல்பாகவேதன்னுணர்ச்சிவெளிப்பாடுகளாகவிளங்குகின்றன. கவிதைப் பொருளோடுஅந்நியப் பட்டு,பட்டியல் போட்டுஒப்புக்குக் கவிதைசொல்லும் போக்கு இக்கவிஞரிடம் காணப்படவில்லைஎன்பதுசிறப்பித்துக் கூறத்தக்கது. இவரதுகவிதைகள் வாசகரை இயல்பாகவேவசீகரிக்கத்தக்கவை. ஜெயசீலனின் கவித்துவம்,அவர் கையாளும் மொழிஅவரதுநடைச் சிறப்புஅனைத்தும் அவரைஒருதேர்ந்தகவிஞனாக இனங்காட்டுகின்றன.
இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளகவிதைகள் எழுதப்பட்டகாலக்குறிப்பையும் கவிதைகளின் கீழ் தந்திருந்தால். கவிஞரின் வளர்ச்சியைஎடைபோடவசதியாக இருந்திருக்கும்.
தரமானநூலுக்குஒருமுக்கியமானஅடையாளம்,மீண்டும் மீண்டும் வாசகரைப் படிக்கத் தூண்டுவதாகஅமையும் தன்மை. ஜெயசீலனின் ‘கனவுகளின் எல்லை’என்ற இக் கவிதைத் தொகுதியும் வாசகரைமீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்.
(இந் நூல் விமர்சனம் தை 2002 இல் ‘ஞானம்’ சஞ்சிகையில் வெளியாகி இருந்தது.)