போராட்டங்கள் பலநிறைந்தயாழ்ப்பாணமண்ணில் புதிதாகவிளைந்துபலரதுகவனத்தையும் கணிப்பையும் பெற்ற இளங் கவிஞர் த.ஜெயசீலன். கவிதையாப்புவாகாகக் கைவரப் பெற்றிருக்கும் இவரது 71 கவிதைப் பூக்களால் தொடுக்கப்பட்டபாமாலை இத்தொகுதி.
ஒருவிஞ்ஞானப் பட்டதாரியாகியகவிஞர் தன் வாழ்க்கையின் புறஅகச் சூழல்களால் எழுந்தமன உணர்வுகளை,அதிர்வுகளை தனது அழகுசீர் வரிகளால் அருமை மிகுகவிதைகளாகச் சொரிந்துள்ளார்.
ஓவ்வொரு கவிதையும் ஒவ்வொரு உணர்வை மட்டுமன்றி ஒவ்வொரு செய்தியையும் எமக்குச் சொல்கின்றது.
உதாரணமாக‘அஞ்சலி’என்றகவிதையில் எமதுமண்ணில் எம்மால் உருவாக்கி இன்று எம்மையேவிழுங்கிநிற்கும் துப்பாக்கிக் கலாசாரத்தைவெளிப்படுத்துவதுடன் அதன் முன்னால் மௌனியாகிப் போனதமிழ்ச் சமூகத்தையும் விமர்சனமும் சுயவிமர்சனமும் செய்கிறார் கவிஞர்.
கவிதைகளின் அச்சாணியாகமனச்சாட்சிதிகழ்வதால் கவிஞரிடமிருந்துமேலும் கவிதைப் பிரசவங்களைத் தமிழ்த்தாய் எதிர்பார்க்கின்றாள்.
(இது தை 2002இல் வெளிவந்த‘அமுது’சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்ட‘கனவுகளின் எல்லை’தொகுதிதொடர்பானசுருக்கக் குறிப்பு)