தமிழ்த் தூதர்

தமிழில் தூது…. உலாபலஉள்ளது!
“தமிழுக்கே தூதன்”ஆகிதமிழதன்
அமிழ்தினிமையைஉலகம் முழுவதும்
அறிவித்தோரில் ஒருவர்…தனிநாயகர்
நமதுமண்ணில் உதித்து நூறாண்டுகள்
நகர்ந்ததைநன்றியோடுநினைபவர்…
தமிழின் சங்கத்தார்…அருட்பணியாளர்கள்
தமை… இக்கணத்தில் பணிந்துவணங்கினேன்!

நம் நெடுந்தீவுமண்ணில் உதித்திந்த
நானிலம் போற்றநடந்தபெருமகர்
செம்புலமைகள் கொண்டுஒப்பியலாய்வை
திசைக்குச் சொன்னவர்…. பல்மொழிவல்லுனர்!
சென்ற இடத்துச் சிறப்பைஎம் மண்ணுடன்
சேர்த்துஆய்ந்தவர்… ஆம் யாழ் புனித
சம்பத் திரிசியார்த் தாயவள்…பெற்றநற்
தலைமகன்…தனிநாயகத் தேவனாம்!

சிலுவைப்பாதையில் சென்றபொழுதிலும்
தேன் தமிழையேஜெபித்துநிமிர்ந்தவர்!
பலதும் பத்தும் அறிந்துதெளிந்தும்…தான்
பயின்றதமிழால் உலகைஅளந்தவர்!
கலைத்துறைகற்று…கரைபலகண்டு…மெய்
கணித்துதமிழின் உயர்வைமதித்தவர்!
மலைப்பிரசங்கமாகத் தமிழ்ப்புகழ்
மற்றவர்களும் அறியஉரைத்தவர்!

Leave a Reply