Author Archives: Webadmin

காலத்துடன் வாழ்தல்

காலமெனும் பட்சி இரவு பகற் சிறகை மாறிமாறி அடித்துப் பறந்து வர வரலாறு தாவி நகர்கிறது!

Posted in கவிதைகள் | Leave a comment

மிருக நேயம்

அப்படி என்ன அகோரப் பசி தீக்கு? எப்படி மூண்டதென எம்மூளை தேறு முன்னே… ஐம்பது கோடி ஐந்தறிவு சீவன்களை வெம்மையுள் வீழ்த்தி உலகின் பெரும் ‘வேள்விக் குண்டமெனப்’ பெருங்காட்டைக்

Posted in கவிதைகள் | Leave a comment

மண் மீட்பு

மண்ணை மீட்டிடல் என்பதை நாங்களும் மறந்து பத்தாண்டு ஓடிப் பறந்தது. மண்ணின் மீட்பு என்ற விடயம் நம் மைந்த ருக்குப் புரியாப் புதிராச்சு. மண்ணை மீட்டிடல் என்பதன் அர்த்தத்தை மாறிப் புரிந்த நம் மக்கள் …தடை விழ மண்ணை வெற்றுக் காணிகளில் நின்று வலிந்து மீட்கிறார்…யார்தான் தடுப்பது?

Posted in கவிதைகள் | Leave a comment

அன்பர்களுக்கு

அமைதியாகத் தானே அன்றுவரை யான் இருந்தேன்! அமைதிச் சொரூபமாயும் அள்ளி அள்ளி வளமெல்லாம் அட்சய பாத்திரமாய் அனுதினமும் யான் அருள உட்கொண்டீர்…நானும் ஓயா துதவிசெய்தேன்! அன்னாய் என வந்தீர் அமுது நிதம் ஊட்டிவிட்டேன்! என்மீது கரிசனைகள் ஏதுமற்று உமக்கேற்ப

Posted in கவிதைகள் | Leave a comment

புனிதம்

மீள மீளப் பாறைகளில் வந்து வந்து மோதியே போம்…அலைகள் பாறைகளின் அழுக்ககற்றி புனிதமாக்கும் தீவிர பணியில் திளைக்கிறதா?இல்லாட்டில் பாறைகளில் மோதிமோதித் தமைத்தாம் துவைத்தபடி “தாம் புனிதம் ஆகிடலாம்” என்று தவித்தனவா?யார் – யாரைப் புனிதமாக்க வேண்டும் என்று புரியாது- தான்…இவைகள் போராடி விடை தெரியா துள்ளனவா?பாறைகளும் கரையாத மனதோடு பார்த்துளதா?

Posted in கவிதைகள் | Leave a comment

வீதி விதி

துப்பாக்கி, கைக்குண்டு ,ஆர்.பி.ஜி , எறிகணையை அப்போது நம்பி அலைந்த எமதர்மன் எப்போதோ டெங்கை,தற்கொலையை, கொலையை, நம்பி… இப்போது அநேகமாக நம்புகிறான் விபத்துகளை !எப்பாதை தனில் வருவான் இவன் சொல்வார் யார் பதிலை?

Posted in கவிதைகள் | Leave a comment

பாரதி ‘பா ரத’ சாரதி

எட்டய புரத்தில் அன்று எழுந்த தீக் குஞ்சு …இன்று தொட்டு அடிமுடிகள் காணா சுடர்ப் பிழம்பாகி …எங்கள் பட்டிகள் தொட்டி எங்கும் பரவியே சமூகக் குப்பை முற்றாக எரித்து என்றும் முளாசுது தொடர்ந்து வென்று.

Posted in கவிதைகள் | Leave a comment

அழிவின் விளிம்பில்

காலாதி காலமாய் கடவுளுக் கஞ்சியே காய்த்தது எங்கள் வாழ்வு.கற்பென்றும் மானமே கண்ணென்றும் நீதிமுன் கைகட்டிற் றெங்கள் ஆழ்வு.வேல்கொண்டு வாள்கொண்டு வென்று நிமிர்ந்தாலும் மிக்க பண்பாடு கண்டு விழுமியம் காத்தது விதியை மதித்தது மேன்மை நூல் கற்று நின்று.வாழ்விலே நேர்த்தியும் வரலாற்றில் கீர்த்தியும் வாழ்முறை கூர்ப்பும் கொண்டு மண்ணிலே நூறாண்டு மாண்போ டுயிர்த்தது வையம் வியக்க அன்று.காலங்கள் மாறிற்று கோலங்கள் மாறிற்று கடன் ‘மேற்கில்’ நித்தம் பெற்று கைவிட்டு… வாழ்க்கையை மாண்பினை … Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வானவில் வாழ்த்து

வெயிலும் மழையும் விமர்சயாய் மணம் முடிக்க கையில் குளிர் முகிலைப் பூச்செண்டாய் ஏந்தி ஏழு வர்ண வானத்து வில்லாம் கிளி…சாரற் பாமாலை தூவி பன்னீர் தெளித்து …வாழ்த்துச் சொல்கிறது வானரங்கில் சுக அந்தி நகர்கிறது!எல்லையில்லாக் கற்பனைக்குள் இதயம் குளிக்கிறது!

Posted in கவிதைகள் | Leave a comment

மக்கள் ஆட்சி

முடிந்தது தேர்தல் கூத்து!மும்முர மாக எண்ணி விடிந்ததும் அநேக மாக விடை…”வென்றார் இவர்தான்” என்று பட படப்போடு செய்தி பரவிடும்! வென்றோன் நாமம் வெடிகளால் அதிரும்! வீழ்ந்தோன் மீசை… மண் உதிர வேகும்!

Posted in கவிதைகள் | Leave a comment

காலத்துடன் வாழ்தல்

காலமெனும் பட்சி இரவு பகற் சிறகை மாறிமாறி அடித்துப் பறக்க வரலாறு தாவி நகர்கிறது!

Posted in கவிதைகள் | Leave a comment

வாக்குப் பண்பாடு

வேட்பாளர் ஆனாற்தான் என்ன …வெற்றி வேந்தர்கள் ஆனாற்தான் என்ன …ஊரை ஆட்கொள்ளும் சாமியானால் என்ன …செல்வம் அடைந்தவரே ஆனாலும் என்ன …கற்ற கோட்பாட்டாளர் என்றால் என்ன …கஞ்சி குடிக்கவழி அற்றிருந்தால் என்ன …ஞான மீட்பர்கள் ஆனாலும் என்ன …வாக்கு ஒன்றேதான் யார்க்கும் சம உரிமை அன்ன!

Posted in கவிதைகள் | Leave a comment

ஒருநாளதிகாரம்

ஐந்து வருடத்துக் கொருதரம் ஓர்நாள் மட்டும் வாக்கெடுப்பு நிலையம்தான் நீதிமன்றம்!அரசசேவையாளர்தான் நீதிமன்றப் பணியாளர்!கட்சிகள்தான் வாதாடும் வக்கீல்கள்!

Posted in கவிதைகள் | Leave a comment

ஒற்றுமை கொள்வமா?

மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழலாம்.மனமிருப்பின்…நாம் வெற்றியின் மாலைகள் எண்ணுக் கணக்கற்றெம் தோள் சேர்த்தும் ஆடலாம்.எண்ணம் போல நாம் வாகைகள் சூடலாம்.விண்ணின் சுவர்க்கத்தை வீதிக் கிறக்கலாம்.வெற்றி கொள்ளலாம்…நாமொன்றாய் நிற்கில்…நம் புண்ணை மாற்றலாம். பொலிவைப் பெருக்கலாம்.புன்னகை நிதம் பூத்தெழச் செய்யலாம்!

Posted in கவிதைகள் | Leave a comment

வலை

எச்சிலில் இருந்து இழைதிரித்து உறையவைத்து இச்சிறு சிலந்தி எழில்வலை பின்னுகிற வேகத்தைக் கண்டு வேர்த்துக்கொட்டிய தெனக்கு!யாரிதற்கிவ் ஆற்றலை அருளியது?

Posted in கவிதைகள் | Leave a comment