Author Archives: Webadmin

விதைத்ததும் அறுத்ததும்

நேற்று விதைத்ததனை நீஇன்று அறுத்தெடுத்தாய்! நேற்றுவரைச் சோள விதைகளென நிறையவே பாவம் பழியையெல்லாம் பரபரப்பு ஏதுமின்றி காட்டுகிற கண்ணசைவால் நீவிதைத்தாய். அவற்றுக்கு

Posted in கவிதைகள் | 1 Comment

கனவுகளின் எல்லை

நனவுகள் நமக்குத் துயரையே நல்கிடினும், நனவுகளில் நமக்குத் தீமையே நிகழ்ந்திடினும், நனவுகள் எம்மை நசித்துப் பிழிந்திடினும், நனவுகளில் ஏதும் நன்மை நடவாதா? நனவுகள் இன்பத்தை நமக்கு அருளாதா?

Posted in கவிதைகள் | 2 Comments

தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா

27-7-2013 அன்று திருமறைக் கலாமன்றத்தில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுப் பெருவிழா நடைபெற்றது. இதில் இடம் பெற்ற கவியரங்கம் நிகழ்வின்போது.  

Posted in நிழற்படங்கள் | 1 Comment

இதயத்தை அறுத்து எடுமின்கள்

இதயத்தைக் கல்லாக்கி இருக்கின்றோம் உயிர்ததும்பும் இதயத்தைக் கல்லாக்கித் தான் நாம் கதையளந்தோம்.

Posted in கவிதைகள் | Leave a comment

தூக்குக் கயிறாகும் கேள்விகள்

உலகத்தைப் பற்றி உயர்ந்த இயற்கைபற்றி உயிர்மூலம் பற்றி, உருண்டோடும் வாழ்வுபற்றி, இயக்குகிற சக்திபற்றி, கடவுள்என்னும் ஒன்றுபற்றி, கேள்விகள் நூறுநூறு கேள்விகள்

Posted in கவிதைகள் | Leave a comment

பனையும் பைனும்

பனைக்கு நிழலில்லை பார் நானும் என்செய்வேன்? பனைதான் எம்முன் இருக்குமரம். பயன் நூறு

Posted in கவிதைகள் | Leave a comment

உலகியல்

வல்ல உலகில், வரத்தைவிடச் சாபத்தை அள்ளி வளங்கி ஆனந்தப் படும் உலகில் எத்தனையோ சுத்து மாத்து அரசியல்கள் சத்தியத்தை விற்றுச் சாதிக்கும் பூவுலகில், மற்றவனைத் தட்டிச் சுற்றி மடக்கிலாபம்

Posted in கவிதைகள் | Leave a comment

வெறுப்பு விசம்

வெறுப்பை… கொடிய விசந்தன்னை நாகமொன்று மிரட்டுகிற பாணியிற் படமெடுத்து மிகச்சீறி உமிழுவதைப் போல உமிழ்ந்தாய் நீ என்மீது! உனக்குப் பிடிக்காத எனக்கு மிகமிகவும் அவசிய மான ஒன்றை..

Posted in கவிதைகள் | Leave a comment

பாவக்கரம்

இரத்தக் கறைபடிந்த கையைநான் பார்க்கின்றேன்… இரத்தம் கருஞ்சிவப்பு இரத்தந்தான் பீறிட்டுக் கையிற் தெறித்துச் சுடுகிறது அந்திவானாய்! இரத்தத்தில் உயிரினது சூடும் அதன்வாசமதும் குறையா திருப்பதனை என்கை உணர்கையிலே குருதித் துளியைத் துடைத்து மாயமாயென்

Posted in கவிதைகள் | Leave a comment

மறந்துபோன ஒப்பாரி

இரவு முழுவதும் ஓயவில்லை… மழையினது புறுபுறுப்பும் அதனின் புலம்பல் அழுகையதும். நீண்ட பலநாளாய் நினைத்துவைத்த அனைத்தையும் வேண்டும் வரைகொட்டித் தீர்ப்பதென விடியுமட்டும் ஒப்பாரி சொல்லிற்று ஓயாமல்:

Posted in கவிதைகள் | Leave a comment

பதிலறிந்த கடல்

கேள்வி…துளித்துளியாய் வீழ்ந்து பெருக்கெடுத்து வாரடித்தெம் ஒழுங்கைகளால் ஓடுகிற வெள்ளமாகி காட்டாறாய்ப் பொங்கி களனி வெளிகள் ஊடு பாய்ந்து எமைச்சுற்றிப் படிந்துளன! நான்குபுற

Posted in கவிதைகள் | Leave a comment

மேய்ப்பனல்ல

மேய்ப்பர்கள் மேற்பார்வை யாளராக இல்லாமல் மேய்ப்பர்கள் எல்லோரும் வேட்டையர்களாக இன்று மாறிக்கொண் டிருக்கின்ற வரலாறு நீள்வதனால் மேய்ப்பனாக நானெனையே எண்ண விரும்பவில்லை! யானோர் திசைகாட்டி, யானோர் உபாத்தியாயன்,

Posted in கவிதைகள் | Leave a comment

வனங் கடத்தல்

திக்குத் திசைதெரியா இருள்இறுகும் காட்டுக்குள் சுற்றிவரக் கொடிய ஜந்துகளும் பாம்புகளும் நிற்கும் வனத்துள் நெருஞ்சிகளும் முட்புதரும் கல்லும் புதைகுளியும் கால்வைக்க முடியாது புற்றாழும் கானகத்துள் புகுந்து வெளிவரவோ நகரவோ பாதை எதுவுமற்ற நெடுவனத்துள்

Posted in கவிதைகள் | 1 Comment

இயலாமையை உணரும் கணங்கள்

எழுதிய கவிதை எங்கே…நான் தேடுகிறேன்! எழுதி இடையில் இரண்டோர்சொல் செம்மையாக்கித் திருத்திச் செதுக்குமுன்னே, செல்வம் தொலைந்ததபோல் கரம்விட்டுப் போயிற்றக் கவிதை: எங்கேதான் தொலைத்தேன் அக் காகிதத்தை எனஎந்தன் நினைவுவெளி

Posted in கவிதைகள் | 1 Comment

மரணம் அணுகும் தருணம்

குண்டு விழுகிறது: குலைஅறுந்து சிதறியதாய் குண்டு விழுந்தூரே குலுங்க வெடிக்கிறது. ஒன்றாய் படுத்து உறங்கிய ஒருகுடும்பம் சின்னா பின்னமாகிச் சிதைய அதேஅறையில் தொங்கிய தொட்டிலில் துயின்ற சிசுமட்டும் ஒன்றுமே ஆகாமல் உறவுதேடிக் கதறிற்றாம்!

Posted in கவிதைகள் | 1 Comment