Category Archives: கவிதைகள்

பிடி

நெகிழ்ந்த கயிறுகள் நின்று மீண்டும் இறுகி அகத்தைப் புறத்தை அழுத்தத் தொடங்கியதால்… அசைக்க முடியாமல் அலறி ஓயும் கை கால்கள்.

Posted in கவிதைகள் | Comments Off on பிடி

ஊர் இதம்

வண்ணமயில் தோகை விரித்தாடுகிற போது வாய்திறந்து சந்த கவி பாடுகிற போது என் மனது விண் படியில் ஏறுகிற போது இன்பமெழும்… ஆம் இதற்கு ஈடு இணை ஏது?

Posted in கவிதைகள் | Comments Off on ஊர் இதம்

சிரஞ்சீவி

சாமி உறங்கியதாய்… சாமி மயங்கியதாய்… சாமி உயிர்விட்டுச் சமாதியாய்ப் போனதுவாய்… ஏதும் குறிப்பில்லை எங்கும்! அது நிஷ்டை

Posted in கவிதைகள் | Leave a comment

மீண்டென்றெம் வாழ்வு வாய்க்கும்?

காலங்கள் மாறிடும் கோலங்கள் மாறிடும் கனவுகள் மாறி உதிரும் கண்களின் காட்சியும் கவிதையின் கோணமும் கருத்ததும் மாறி அதிரும் ஞாலத்தின் வாழ்வியல் மாறிடும் …நீதியும் ஞாயமும் மாறி மறுகும்

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லதே நடக்கட்டும்!

பொய்யாய்ப் பழங்கதையாய் போனதெல்லாம் போகட்டும்! மெய்யை வருத்தி, மேனியெல்லாம் புண் பெருக்கி, உள்ளத்தில் ஆறா ஒருகோடி காயங்கள் அள்ளி அடுக்கி,

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பது எப்போ?

கண்ணுக்குத் தெரியாக் கறுமக் கிருமிகளை மண்ணுக் கனுப்பி தனது அதிருப்தியையும் வெறுப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தி இந்நாளில் திரும்பிடுது தன் இயல்புத்

Posted in கவிதைகள் | Leave a comment

மூச்சைத் தேடி

நாதி யற்றவர் ஆனோர் …நிலத்தினில் நாளை என்பதை யாரின் துணையொடெவ் வீதி யாலே கடந்திடுவோம் …?அமர் விபத்தில் சிக்கி முடவர் குருடராய் வேதனை சுமந்தா நிதம் யாசகம் வேண்டி வாழுவோம்? நாமித் திசையதன்

Posted in கவிதைகள் | Leave a comment

உழவு?

உழப்பட்டுத் துடிக்கிறது உயிர்ப்பாய்க் கிடந்த வயல்! உழவு வயலுக்கு ஒன்றும் புதிதல்ல… உழவன், உரிமையாளன், உழும் ஏர், விதை நெல், கலப்பை, சிறுபோகம், காலமழை, பெரும்போகம், விளைவு,

Posted in கவிதைகள் | Leave a comment

தொலைத்த வாழ்வு!

கலப்படமில்லாக் காற்று, கலப்படமில்லாக் குடிநீர், கலப்படமில்லாப் பொருட்கள், கலப்படமில்லா உணவு, கலப்படமில்லா இயல்பு, கலப்படமில்லா ஆற்றல், கலப்படமில்லா உணர்வு, கலப்படமில்லா வாழ்வு, கலப்படமில்லாக் கலைகள், கலப்படமில்லாக் கவிதை, யாவையையும்…. இன்று

Posted in கவிதைகள் | Leave a comment

சுக வாழ்வு

வீட்டைவிட்டு எப்போ வெளிச்சென்று வந்தபோதும், காலை மதியம் மாலையிலும், வீட்டு முன்முற்றம் கிணற்றடியில் கால்முகம் கழுவித் துடைத்துமீண்டு;

Posted in கவிதைகள் | Leave a comment

சென்று கழிந்தவை?

ஆயுள் ரேகைகள் நீண்டு வளர்ந்திட்ட அழகுக் கை பல அன்று சிதைந்தன. ஆயுசு நூறு என்றொரு சாத்திரம் அளந்த மெய்களும் தானே சிதறின. காவல் நூல்கள், தாயத்துக் கட்டிய கவிதைகள் கூடக் காணாமற் போயின. கோவில் கடவுளே தஞ்சம் என நம்பிக் குனிந்த குடி(ல்)களும் கூட நீறாகின!

Posted in கவிதைகள் | Leave a comment

அப்பா(கா)விகள்

குண்டுகளைக் காவிக் கொடிய சமர்க்களத்தில் சென்று மனித வெடிகளாகிச் சிதைந்து அந்த இடமழித்த அநேககதை இங்குண்டு! இந்தமுறை குண்டுகள் இல்லை கண்காணாச்

Posted in கவிதைகள் | Leave a comment

நேர்த்தி

தவழ்ந்து… நடந்து… இன்று தானாய் வேகம் எடுத்து எவரையும் கணக்கெடாது இங்கும் ஓடத் தொடங்குது நோய்! தனிமைச் சிறைக்கதவு ஏன் திறந்த தெனும் தர்க்கம் கனவில்;

Posted in கவிதைகள் | Leave a comment

கடன்

யாரையும் குறைசொல்லத் தேவையில்லை! நாமெலோரும் யாரிலும் குறைகளைக் கண்டும் பயனில்லை! உச்ச அழிவுற்ற உயர்நாட்டில் எவ்வாறு அச்சம் கொள வைத்து மடங்கில் அடுக்குகளில் தொற்றிற்றோ இந்தத் துயரம்….

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றும் நாளையும்

மரணத்தின் தூதுவர்கள் வழமைபோல் அல்லாமல் திரிகின்றார் ஓய்வொழிச்சல் இன்றி திசையெட்டும்! மேலதிக நேர வேலைசெய்து அவர் உழைக்க, காலனும் கண்ணுறக்கம் இன்றிக் கடன் செய …முச்

Posted in கவிதைகள் | Leave a comment