Category Archives: கவிதைகள்

நன்றே நடக்கவேணும்!

காட்டுத்தீ கருக்கிற்று கனவினது காற்பங்கை! நேற்றுவந்த நோய்த்துயரம் நீறவைக்கும் அரைப்பங்கை! “இயற்கைக்கு மீள்வோம் எல்லோரும் ” எனநனவில் தயங்கி விதையூன்றி …

Posted in கவிதைகள் | Leave a comment

மீட்பு

தங்குதற்கு மட்டுமல்ல வாழுதற்கும் வீடுகள்தாம் சங்கையான இடங்களெனச் சகலரும் உணர்ந்தார்கள்! வீடுகளுள் உறைந்து பல வித்தை புரிந்தார்கள்! ஆடு மாடு கோழிகளை அரவணைத்துக் கொண்டார்கள்! ஓய்வை எடுத்தார்கள்!

Posted in கவிதைகள் | Leave a comment

இறைவரை கண்டோம் நேரில்!

  தெய்வங்கள் தம்மை நேரில்திசைகளில் கண்டோர் இல்லை!தெய்வங்கள் சிலையாய் நிற்கும்;செயற்படும் அழகைப் பார்த்துஉய்தவர் இல்லை! நஞ்சைத்தான் உண்டு உலகைக் காத்தசெய்தியைச் சிவனில் கேட்டோம்….செய்ததைக் கண்ட தில்லை!

Posted in கவிதைகள் | Leave a comment

புதுமை ஆண்டு

புதிய தானதோர் ஆண்டு மலர்ந்தது! புதுமை இம்முறை….யாரும் எவர்களும் புதிதுடுத்து உயிர்த்து திருத்தலம் போய்…அறுசுவை உண்டு சிலிர்த்திடும் கதைகள் இல்லாது வீட்டில் இருந்துயிர் களித்து குடும்பத்தி னோடு கதைத்துண்டு அதிலும் இன்புறும் ஆண்டு; ‘கொரோனாவால்’ ஆடம் பரமற்றுப் பிறந்த புத்தாண்டிது!

Posted in கவிதைகள் | Leave a comment

சத்தியம் வாழும் வரை

கண்களில் தெரியட்டும் கனவதன் எல்லை. கைகளில் கனியட்டும் வாழ்கையின் காய்கள். புண்களும் ஆறிடும் பொழுதுகள் தோன்றும். பூ இனம் நாளையும் பூத்திடும் பாரும். எண்ணில் நரர்…கணம் அழுதிடும் போதும் இதயத் துடிப்பூமை ஆகுமா தேறும்? வண்ணம் வெளுக்காது வரும் தினம் வானம்… வல்லமை வீழ்ந்திடா துயிர் பெறு நீயும்!

Posted in கவிதைகள் | Leave a comment

அநாதை உலகு

அநாதையாச்சு வானம். அநாதையாச்சு முகில்கள். அநாதையாச்சு காற்று. அநாதையாச்சு வெய்யில். அநாதையாச்சு கதிரும். அநாதையாச்சு நிலவும். அநாதையாச்சு கடலும். அநாதையாச்சு கரையும். தனிமைப் படுத்தல் …சுய தனிமைப் படுத்தலென மனிதர்… சகமனிதர் உடன் தானும் சகஜமாக உரையாடக் கூட உதவாதோர் எனப் பழித்துக் கொரோனா சபிக்க;

Posted in கவிதைகள் | Leave a comment

அஞ்சுதல் அஞ்சாமை பேதமை!

ஏனின்னும் நாங்கள் எதிலும் அலட்சியமாய், ஏனின்னும் நாங்கள் எதிலும் அசட்டையாய், ஏனின்னும் நாங்கள் எதையும் புரியாது, ஏனின்னும் நாங்கள் எதற்கும் பயப்படாது, அஞ்சுதல் அஞ்சாமை பேதமை என் றறியாது, கெஞ்சி…’விளங்கியவர்’ கேட்க செவிகொடாது,

Posted in கவிதைகள் | Leave a comment

உலகு உணர்ந்ததெதை?

விண்ணிலும் மண்ணிலும் விரிந்த கடல்களிலும் நின்ற கபாட நெடுங் கதவம் எல்லாமும் ஒவ்வொன்றாய் மூடப் பட முகத்தைத் தத்தமது ஒவ்வொரு எல்லைகளின் உள்ளும் வளை எலிகள்

Posted in கவிதைகள் | Leave a comment

அவையா இவை?

எங்கே இதுவரை இருந்து திடீரென்று எங்கும் பரவி இறக்கவைத்த திக் கிருமி? இன்றா இது தோன்றிற்று? ‘என்றைக்கோ தோன்றி…ஓர் சின்னஞ் சிறுசீசாச் சிறைப்பட்டு அதுதிறக்கப்

Posted in கவிதைகள் | Leave a comment

என்றுமே தோன்றியிரா இடர், துயரம் !

தொட்டு ஸ்பரிசித்து சுகமளித்து தீட்சைதந்து முட்டறுத்து மோட்சம் அருளும் முறை கதை போய் தொட்டாலே…’மோட்சம்’ தொடும் அச்சம் சூழ்ந்து சற்று

Posted in கவிதைகள் | Leave a comment

உலகை உணர்!

தனித்திருத்தல் தவத்தின் முதற் படியில் ஒன்றாம்! தனித்திருத்தல் பெரும் யோகம்! ஞானம் காண தனித்திருத்தல் மார்க்கம்! இன்று தொற்று நோயில் “தப்ப இது ஒரே வழி” விஞ்ஞானம் ஏற்கும்! தனித்திருத்தல், தனிமைப் படுத்திடுதல், ஊரை சமூகத்தை, குடும்பத்தை, நாட்டை, வீட்டை, தனிப்படுத்தி உயிர் காப்போம். தேவை என்றால் தரணியையும் தனிப்படுத்தி உய்யப் பார்ப்போம்!

Posted in கவிதைகள் | Leave a comment

முகமூடி வாழ்வு

அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பார் அகத்தினது ஐய அச்சம் முகத்தில் முகமூடி அணியவைத்த தின்று! ஆம் உயிர்க்கு ஊறுவரும் கணத்தில்…முகஅழகு

Posted in கவிதைகள் | Leave a comment

அச்சம் ஆளும் நாட்கள்

எப்படித்தான் இந்தத் துன்பம் எங்களையும் சூழ்ந்தது? ஏழு கடல் தாண்டி இன்றெம் ஊரும் தீப்பிடிக்குது. இப்ப எட்டுத் திக்கும் இந்த நோயில் வெந்து சாகுது, எம்மூர் வெப்பம் எம்மைக் காக்கும் என்றம்; ஏன் பிழைக்குது?

Posted in கவிதைகள் | Leave a comment

கலியின் கோலம்

சகுனிகளே அதிகமாக வாழும் காலம். தருமமொடு சத்தியத்தைத் தனியே நம்பி அகம் புறத்தில் தருமர்களாய் வாழ்ந்தால் மட்டும் ஆகாது; முள்ளை முள்ளாலே கொய்யும் வகையினிலே….புறத்தோற்றத் தருமர் கூட மனதினுள்ளே சகுனிகளாய் மாற வேண்டும்! மிகப்பெரிய வாழ்க்கைப்போர் நடக்கும் இந்த மேதினியின் தீயைத் தீயால் அணைக்க வேண்டும்!

Posted in கவிதைகள் | Leave a comment

காதல் வெல்ல

காதல் எனும் மாயை –வந்து கண்ணை மறைத்தாலும்–அட சாதலைக் காட்டியேனும் –அதைச் சாதிக்க நின்றாலும் –உயிர்ப் பாதி என புகழ்ந்து –உடற் பாடம் பயின்றாலும் –வரும் மோதல் சில தினத்தில் –மோகம் முப்பது நாள் ஆகும்!

Posted in கவிதைகள் | Leave a comment