Category Archives: கவிதைகள்

படையல்

யாருக்குப் படைக்கப் படுகிறது இவ்வுணவு? நீலநிற வாழைத் தலைவாழை நெடும் இலையில் வெள்ளருசிச் சோறாய் வெண்முகில்கள் சுற்றிவர…

Posted in கவிதைகள் | Leave a comment

உயிர்ப்பு

இலைகளை எரித்தது வெயில். நிமிர்ந்துநின்ற கிளைகளை முறித்தது கிளம்பிவந்த பேய்க்காற்று. பூக்களைச் சபித்து மொட்டுதிர்த்தது குளிர்மை.

Posted in கவிதைகள் | Leave a comment

மொழி

வானம் ஒரு உதடு! மண்ணோ மறு உதடு! ஆம்…இவைக் கிடையே அசையும் நா….கடலாச்சு! கடல் நா…காற்று ‘அண்ணங்களை’ வளைந்து தொடத்தோன்றும்….பிரபஞ்ச சுருதி! வான் மண்ணாம் உதடுகள் பேச நினைத்தவைதான் மொழிகள்…..அறி!

Posted in கவிதைகள் | Leave a comment

சுகப் பயணம்

தட்டி வானுக்குள் தலைதிருப்ப இடமின்றி, முட்டி மோதி, மூட்டை முடிச்சு வாழைக்குலைகள் பெட்டிக் கருவாடு மீனோடு மீனாகி, திட்டி பள்ளம் ஏறி, திரண்ட புழுதிப்பூ சூட்டி,…. திகட்டாத சுகப்பயணம் ‘குளிர்ப்படுத்தி’ போட்டுறைய வைக்க, ‘குஷன் சீற்’ அணைத்திறுக்க, சிறப்பு படக் காட்சி சீராட்ட காப்பற் ரோட் வருடி உறங்கவைக்கும் போதும் வருதிலையே!

Posted in கவிதைகள் | Leave a comment

கடன்

மனமெனும் நெய்யில் நினைவெனும் தீயை வளர்த்துளே வழிபடு கின்றோம். வலி பகிராமல்… வதை உரையாமல்….. வரங்களுக்காய்த் தவம் செய்தோம். கனவுகள் வெந்து நனவிலும் நொந்து கவிதையில் நேர்ந்தழுகின்றோம். கழியுமோ சாபம்? கலையுமோ தாகம் ? கடன் அடைக்காதின்றும் உள்ளோம்!

Posted in கவிதைகள் | Leave a comment

மழைப் பேச்சு

ஓயாமல் பகலிரவாய் உளறிடுது வானமழை! கோபத் துடனெனினும் குளிராய்த்தான் ஊரினது காது செவிடுபட கத்திக்கொண் டிருக்குதின்று! யார் கேட்பார் என்ற கவலையற்று வாய் உழைய ஓர் ‘சில் வண்டாய்’ இடைவிடா திரைகிறது! வீடுகளில் ஜன்னல் கதவுகளில் துளி எச்சில் மோத முழங்கிடுது முறைத்து! கண்களிலே கோபமின்னல் வெட்டித் தெறிக்கக் குமுறி …எங்கோ ஏதோ ஓர் மேசையில் … Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மீள் நடுகை

வானில்வாழும் நீராவி முகில்களெனும் வண்டியேறி, கூதலில் குளிர்ந்தொடுங்கி, குதித்துத் துளிகளாகி, காற்றின் தெருக்களில் கால்நடையாய் வழுக்கி, தூரப் பயணமாகி,

Posted in கவிதைகள் | Leave a comment

சுடர்களின் காலங்கள்

சுடரொவொன்றும் சூரியனாய் சுடர்ந்த தொரு காலம்! “புதைந்த கனவொவொன்றும் போய்ச் சுடரில் முகம் காட்டி ஒளிருமெனும் நம்பிக்கை தனில் உயிர்த்த தக்காலம்!

Posted in கவிதைகள் | Leave a comment

சிறை (த்) தாய்

ஒருவேளை முக்குருத்தில் ஒன்றே வளர்ந்துயர்ந்து இருநூறு கோடிசேர்த்து எக்கடனும் அடைத்திருக்கும்…. ஏன் அதற்குள் மரணத்தை இவைக்கும் பரிசளித்தாய்?

Posted in கவிதைகள் | Leave a comment

நாவல் ஆச்சி

நாவற் பழங்கள் நம் ஊரின் ‘பெரி’ப் பழங்கள். நாவற் பழங்கள் நம் தமிழின் ருசிப்பழங்கள். நாவற் பழத்துக்கும் நம் ஆச்சி மாருக்கும் யாது தொடர்பு..நம் ‘ஒளவை’ முதற்கொண்டு ? பார்த்தேன் யான்…

Posted in கவிதைகள் | Leave a comment

முக ‘வரி’ 

  ‘ஆட்டுக்கல் அம்மி’ தனில்அரைத்த தோசை சம்பல், ‘திரிகையிலே’ பயறு திரித்துசெய்த பலகாரம், ‘மாற்றுலக்கை’ போட்டுரலில் இடித்த அரிசிமா அப்பம்,

Posted in கவிதைகள் | Leave a comment

வீராப்பு 

    நீதியெது நியாயமெது தெரிகிறதா நாளும் ? நீங்காத சோகம் நம் நெஞ்சிலிடும் கோலம்! சாதியினால் சமயத்தால் சாகவில்லை ஓலம்  சாத்தான்கள் கருவறையில்….மனிதமதா வாழும் ?

Posted in கவிதைகள் | Leave a comment

என் கவிதை

கடவுளையே விமர்சிக்கும் போது…அந்தக் கடவுளையே மறுதலித்து ஒதுக்கும் போது கடவுள்மேல் குறைகண்டு கொதிக்கும் போது கடவுளிலே குற்றங்கள் சாட்டும் போது கடவுளென்று ஒருவனில்லை என்று கூடக்

Posted in கவிதைகள் | Leave a comment

அனிதா

உன் அறிவின் ஆழம், உன் முயற்சி, உன் தகமை, உன்னுடைய ஆற்றல், உனது அடைவு மட்டம், உச்சம்தான்….! ஆனாலும் மூட்டை தினம் சுமந்தும், “பிச்சை புகினும் கற்கை நன்றே ” என்ற

Posted in கவிதைகள் | Leave a comment

குற்றம் கடிதல்.

  கத்தியின்றி இரத்தமின்றிக் கணமும்…முக  நூலில் …’வாய் யுத்தம்’ புரிந்துலகை ஊரைத் திருத்திவிட  கத்திக் குளறி,  ‘சரி –பிழைக்கு’ ஆதரவாய்  குத்தி முறிந்தபடி, குமுறி வெடித்தபடி,

Posted in கவிதைகள் | Leave a comment