Category Archives: கவிதைகள்

முற்றுப் புள்ளிகள்?

அமைதிக் கதைக்குவைக்கப் பட்ட குருதிதோய்ந்த இரு ‘முற்றுப் புள்ளிகளா’ நீங்கள்? பொதுவாக ஒரு ‘முற்றுப் புள்ளி’ முடிவு: நும்மரணம்

Posted in கவிதைகள் | Leave a comment

பாவம்

“மந்திரச் செபத்தாலே மாறிவிடும் இல்லையெனில் அந்த உயிரிறைவன் அடியினையே சென்றுசேரும். எந்த மருத்துவமும் இதைத்தடுக்க முடியாது.

Posted in கவிதைகள் | Leave a comment

பிறவி

கடலில் விழுகிறது மழையின் துளியிலொன்று! கடலோடு ஒப்பிடையில் மழைத்துளி மிகச்சிறிது! கடலில் அதுவிழுந்தால் கடலினிலே மாற்றமேது? கடலின் அளவில், சுவையில், அதன் நிறத்தில்,

Posted in கவிதைகள் | Leave a comment

போய்க் கொண்டிருக்கின்றோம்

போய்க் கொண்டிருக்கின்றோம்: போகும் திசையறியாது போய்க் கொண்டிருக்கின்றோம்: மனவழியில் கால்போகப் போய்க் கொண்டிருக்கின்றோம்: வாழ்வில் எப் பிடிப்புமற்றுப் போய்க் கொண்டிருக்கின்றோம்:

Posted in கவிதைகள் | Leave a comment

பேனா முகில்

உன்னுடைய பேனா ஒருமழை முகில்போலாம்! அந்த முகில்கரைந்து அள்ளிப் பொழிந்தமழை– போலப் பெருகி வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடிற்று உன்எழுத்து!

Posted in கவிதைகள் | Leave a comment

திசைபூக்க அன்பு சொரிவாள்

தேவாதி தேவரும் பூமாரி தூவிடச் சிங்கத்தில் ஏறி வருவாள்! தீமைகள் யாவையும் தீயவர் வாழ்வையும் தேடியே நின்று சுடுவாள்! பாதாதி கேசமும் பொன்மின்ன பார்வையில் பரிவையும் காட்டி எழுவாள்!

Posted in கவிதைகள் | Leave a comment

சந்நதியெம் சந்ததிக்கு காவல்

அன்புகனிந்துன் பதியை வந்து அணைந்தேன். –இன்று ‘அன்னதானக் கந்தனே’ உன்வீதி உருண்டேன்! சந்நதியெம் சந்ததிக்கு காவல் உணர்ந்தேன். –உந்தன் தாள்நிழலே ஞானமடி என்று தெளிந்தேன்!

Posted in கவிதைகள் | Leave a comment

நியாயப் படுத்தல்கள்

நியாயப் படுத்தல்கள் முடிவுகளாய் மாறாது. நியாயப் படுத்தல்கள் இறுதித் தீர்வாகாது. நானென் ‘சரி’ உரைக்க நியாயப் படுத்துகிறேன். நானென் ‘பிழை’மறைக்க நியாயப் படுத்துகிறேன்.

Posted in கவிதைகள் | Leave a comment

விழா உலா

உன்னுடைய வீதியில்நீ உலவும் போது உன்னெழிலின் சூடுருக்க…பனியா கநான் உன்னடியில் உருகிடுவேன்! உன்னைக் கண்டென் உயிர்உளமும் குளிர்ந்து…பரவசத்தில் ஆழ்ந்து இன்பத்தின் எல்லைதொட்டு…துன்பம் விட்டு…

Posted in கவிதைகள் | Leave a comment

நல்லையூர் நாதனை நாடு

வேலைப் பிடித்து நல்லூரவன் வீதியில் வெள்ளி மயில்தனில் ஏறி – வந்து மின்னுவான் ஆசிகள் கூறி – அவன் காலைப் பிடித்திரு பத்தைந்து நாட்களும் கண்களில் ஒற்றுவோம் கூடி – “எம்மை காப்பாற்று” என்றாடிப் பாடி!

Posted in கவிதைகள் | Leave a comment

உயர்ந்தவன்

எல்லாத் திலும் ஒருவன் உயர்ந்தவனாய் ஆகிடுதல் சாத்தியமே தானா இச்செக வாழ்க்கையிலே…? ஒருவன் உயரத்தில் உயர்ந்தவனாய் இருந்திடலாம், ஒருவன் நிறத்தில் உயர்ந்தவனாய் திரிந்திடலாம்,

Posted in கவிதைகள் | Leave a comment

நம் நல்லூரான்

அன்பன் எனத்தொடர்ந்தால் அருளி, அணுக்கமான தொண்டனாக்கி, நெஞ்சால் நினைந்தணைக்கும் தோழனாக்கி, என்றும் தனதுயிர் நிழலில் களைப்பாறப்

Posted in கவிதைகள் | Leave a comment

பூமழைப் பொழுது

வேப்பம்பூ ஒவ்வொன்றும் துளிகளாச்சு! முற்றத்தில் வேப்பம்பூ மழைபொழிந்து வேப்பம்பூ வெள்ளம் காலடியிற் பரவிற்று!

Posted in கவிதைகள் | Leave a comment

இசைவேள்வி – 2016

இசையென்னும் சொற்-பொருளாய், இலக்க ணமாய், இலக்கியமாய், இசையமுதைப் படைக்க வல்லோர்… இசைவடிவாய் வாழுபவர்…இறங்கி:எங்கள் இரணம் ஆறிக் கொண்டிருக்கும் மடியில் பெய்த இசைமாரி நம்காற்றைச் சுகந்த மாக்கி,

Posted in கவிதைகள் | Leave a comment

ஊடல்

‘மெல்விரல் இதழ்களைந்தைக் கொண்ட கமலபாதம்… கொல்லும் எரிமலைக் குழம்பாய்க் கொதிக்கின்ற அனற்பாதை தன்னில் அவிந்து பொரியாதோ?

Posted in கவிதைகள் | Leave a comment