Category Archives: கவிதைகள்

நகரங்கள் பற்றிய பாடல்

உங்கள் பெருநகர்கள் உவகைக் கடலிலூறி பொங்கியெமும் போதையிலும், போகக் கிறுக்கினிலும், ஆடிக் களித்திடையில்…அயலிலுள்ள நம்திசைகள் தீப்பிடித்து…இரத்தமும் கண்ணீரும் தெளித்தேனும் அணைக்க முடியாமற் சாம்பராச்செம் நகர்களன்று!

Posted in கவிதைகள் | Leave a comment

எழுதல்

விழுதல் என்பது நிரந்தர வீழ்ச்சியல்ல! எழுதல் மீண்டும் எழுதல் இருப்பின்எங்கும் விழுதல் என்பது நிரந்தர வீழ்ச்சியல்ல! விழுதல் எழவே முடியா திருந்துவிட்டால்… விழுதலும் நிச்சயமாய் நிரந்தர வீழ்ச்சியாகும்!

Posted in கவிதைகள் | Leave a comment

தேறல்

விடியலென்ற ஒன்று இங்கு வாராதா? வினையறுத்த நாட்கள் எம்மைக் கூடாதா? அடிமையாம் விலங்குடைந்து நீறாதா? அகதிவாழ்வு என்பதிங்கு வீழாதா? கடினமான பாதைநாம் கடந்தோமே! கடவுள் காக்கும் என்றுதான் இருந்தோமே! மிடிசுமந்து நொந்து நொந் திடிந்தோமே! விதியும் மாறவில்லை சோர்ந்து சாய்ந்தோமே!

Posted in கவிதைகள் | Leave a comment

எண்ணம்போல் வாழ்வு

காற்றைப்போல் நானிருப்பேன்…கட்டுக்குள் அடங்காத காற்றைப்போல் தானிருப்பேன். யாருக்கும் கைகட்டி தோற்றவரின் முன்துவண்டு குனிந்து தொழுவதற்கோ ஏற்றுக்கொள் வீரென்று எவரின் அடிபணிந்தோ வாழும் வகையறியேன்!

Posted in கவிதைகள் | Leave a comment

நேற்றைய காற்று

நேற்றைய காற்று இன்றைக் கிருக்கிறதா? நேற்றைய காற்று நேற்றோடே போயிற்றா? நேற்றைய காற்றின் நிழலோ..அதன்சுவடோ… நேற்றைய காற்றின் ஸ்பரிச நினைவுகளோ… இன்றிருக்கும் காற்றில் இருக்கிறதா?

Posted in கவிதைகள் | Leave a comment

துயரின் கயிறுகள்

துயரக் கயிறென்னைத் துவளவும் விடாமல் அயலோடு கட்டி அப்படியே பேர்ட்டுவிட கைகால் அசைக்க முடியாச் சிறைப்பிடிப்பில் செய்வ தறியாமல் திகைத்துக் கிடக்கின்றேன்.

Posted in கவிதைகள் | Leave a comment

உனதொரு சொல்

வீசுகிற காற்றைப்போல் வெளியில் நடக்கின்றேன். தகிக்கும் வெயிலில் பொசுங்கி தளர்ந்துகாய்ந்த புல்போலக் காலைவரை ஒடுங்கிக் கிடந்தவன்தான்! துயரமெனுந் தடியால் தொடர்ந்து விளையாட்டாய்

Posted in கவிதைகள் | Leave a comment

மனதின் பட்ட கனவுமரம்

கனவுக் கனிநூறு காய்த்துக் குலுங்குகிற மனமரமோ இன்று இலையுதிர்த்துக் கனிகளற்று வெறும் எலும்புக்கிளைகள் விண்ணளைய நின்றிருக்கு. இரவு பகலென்று இல்லை மழைவெய்யில்

Posted in கவிதைகள் | 2 Comments

கலைத்தாயின் திருக்கோவில்

நூறு அகவைதாண்டி நோகாமல் நொடியாமல் சீரால் சிறப்புகளால் நாளும் செழிப்புற்று ஏறு முகமாக எழுச்சிபெற் றுயர்ந்துசெல்லும் யாழ்இந்துத் தாயின் யௌவன அருட்கழலில் ஆறி அமர்கையிலே…

Posted in கவிதைகள், நிகழ்வுகள், நிழற்படங்கள் | 2 Comments