Category Archives: கவிதைகள்

காண் நிஜம் பொய்யும்!

காலன் வருகிற நாளு -எது கண்டு முதலே தெரிந்தவர் யாரு? சாவின் பின் போவதெவ் ஊரு? -அங்கு தண்டனையோ விருந்தோ உனக்குண்டு? ஆலம் அமுதமும் தின்று -எதை யார் எங்கு என்று வெல்வார் தெரியாது.

Posted in கவிதைகள் | Comments Off on காண் நிஜம் பொய்யும்!

காலம்

கனவுகளைக் காவு எடுக்கிறது கொடுங்காலம். கனவுகள் அடைகாக்கப் பட்டுக் கவனமாக “நனவுகளின் குஞ்சுகள் நாளை பொரிக்குமென”

Posted in கவிதைகள் | Comments Off on காலம்

நினைவுகளை மீட்டல்

நினைவுகள் சிலது கடல் நீரில் மூழ்கினவாம். நினைவுகள் சில மாரி மழையில் கரைந்ததடா. நினைவுகள் சிலது நெருப்பில் பொசுங்கியதா?

Posted in கவிதைகள் | Comments Off on நினைவுகளை மீட்டல்

கனவின் சிறகுகள்

சிறகுகட்டி எங்கெங்கோ சென்று வரும் கனவு! வெறும் காலால் மட்டும் இவ்வளவு வேகமாக வெவ்வேறு திசைகட்கு விரைந்தேக முடியாது! அவ்வளவு வேகமாக அடுத்த அடுத்த நொடி

Posted in கவிதைகள் | Comments Off on கனவின் சிறகுகள்

கேள்விச் செகிடர்.

வானம் அதிரந்ததென -இடி மண்ணில் விழுந்ததென கானம் பிறந்ததடா -கனல் கண்ணைப் பறித்ததடா ஈனம் களைந்திடவே -எழும் ஈடில் இசை அதனை

Posted in கவிதைகள் | Comments Off on கேள்விச் செகிடர்.

தணியாத தாகம்.

எல்லோரும் தம்மை ஏதோ ஒருவிதத்தில் எல்லோர்க்கும் நிரூபிக்கும் எத்தனத்தோ டியங்குகிறார்! ஒருவர் எழுதுகிறார். இன்னொருவர் பாடுகிறார். ஒருவரோ ஆடுகிறார்.

Posted in கவிதைகள் | Comments Off on தணியாத தாகம்.

மறக்குமோ?

நெஞ்சிலே நிதம் சஞ்சலம் எழ நிம்மதி… மனம் கேட்டதே! நீசமே தரும் வெவ்விதி…எனை நித்தம் சிப்பிலி ஆட்டுதே! அஞ்சல் என்றெனை ஆதரித் திட ஆருமில்லை அயலிலே!

Posted in கவிதைகள் | Comments Off on மறக்குமோ?

நம்பு

சொந்தம் யாவுமே வந்த போதிலும் துன்பம் நூறும் தொலையுமோ? சூழும் தீயிடர்… சொல்லும் வார்த்தையில் சோர்ந்து சாய்ந்து கருகுமோ? நொந்த மேனி, மனத்தின் காயம், நோய், நூல்கள் கட்ட மறையுமோ?

Posted in கவிதைகள் | Comments Off on நம்பு

ஆயுளின் நிழலாயிரு!

மந்த மாருதம் என்றுதான்…புயல் மாற இங்கு பணித்தவா! மர்மம் யாவும் அவிழ்ப்பவா! எங்கள் வாழ்வை நாளும் வனைபவா! பந்த பாசம் வளர்ப்பவா! செய்த பாவம் போக்கத் துவைப்பவா!

Posted in கவிதைகள் | Comments Off on ஆயுளின் நிழலாயிரு!

வரவேணும்…வரம்வேணும்!

கவிதை எழுத வரிகள் நனவில் கனவில் மனதில் தருவோனே. கருணை பொழியும் விழியின் வழியில் கருமம் நிகழ அருள்வோனே. புவியில் எனது பொருளும் பொலிய புதுமை நிதமும் சொரிவோனே.

Posted in கவிதைகள் | Comments Off on வரவேணும்…வரம்வேணும்!

மறக்குமோ?

நெஞ்சிலே நிதம் சஞ்சலம் எழ நிம்மதி… மனம் கேட்டதே! நீசமே தரும் வெவ்விதி…எனை நித்தம் சிப்பிலி ஆட்டுதே! அஞ்சல் என்றெனை ஆதரித் திட ஆருமில்லை அயலிலே!

Posted in கவிதைகள் | Comments Off on மறக்குமோ?

ஏக்க வாழ்வு

சூழுகின்றது நாளும் தீயிடர். தொற்றுகின்றது தீமை நோய் நொடி. மாழுகின்றது மண்ணின் மாண்புகள். மாறுகின்றது வாழ்க்கையின் திசை. தாழுகின்றது எங்கள் எண்ணங்கள். சாய்ந்து போகுது பேர் புகழ் பொருள்.

Posted in கவிதைகள் | Comments Off on ஏக்க வாழ்வு

தீ அணைப்பு

நெருப்பொன் றெரிவதற்கு… தகனம் நிகழ்வதற்கு… ‘எரிவதற்கு ஏற்றபொருள்’, ‘எரிபற்று நிலை’, ‘எரியத் துணையான வாயு’ வேண்டும்! அமாம்…இவை மூன்றும்

Posted in கவிதைகள் | Comments Off on தீ அணைப்பு

கொடுப்பினை

கவிதையெனத் திரிந்தவள் தான் அன்று; “கவினினிலே அவளுக்கு நிகர் அவள்தான்” அயல் வியந்து போற்றிற்று! “எவருக்குக் கொடுப்பினையோ” என்று பலர்…பின் அலைய

Posted in கவிதைகள் | Comments Off on கொடுப்பினை

அதிசயர் ‘குமார தாசர்’

நல்லூரை நவீன மாக்கி நாற்றிசை வியக்க ஏற்றி வல்ல நிர்வாகத் தாலே வான் வரைப் புகழைச் சாற்றி பல்வேறு புதுமை கூட்டி பாருக்கு எடுத்துக் காட்டின்

Posted in கவிதைகள் | Comments Off on அதிசயர் ‘குமார தாசர்’