ஞானம் கட்டுரை

(ஞானம் 114 ஆம் இதழில் வெளியான எனது கட்டுரை. இது ‘அருணன்’ என்ற புனைபேரில் பிரசுரிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக இதழ் 115,இல் வெளிவந்த பிற்சேர்கையும்  இத்துடன் இணைக்கப் படுகின்றன.)

சமகால ஈழத் தழிழ்க் கவிதை – ஒரு சுருக்கக் குறிப்பு

தழிழ்க் கவிதைகள் தொன்மை, மிக நீண்ட வரலாறு, பாரம்பரியம் என்பவற்றை கொண்டவை. தொல்காப்பியம் கவிதை இலக்கணத்தை எடுத்தியம்புவதில் இருந்து தழிழ்க்; கவிதையின் வயதை ஓரளவு எடைபோடமுடியும்.

ஈழத்து தமிழ் கவிதையின் தோற்றம் ஈழத்து பூதந்தேவனாரில் தொடங்குகிறது.
பின் சின்னத்தம்பிப் புலவர் ,முத்துக்குமார கவிராயர்,சேனாதி முதலியார்,சிவசம்பு புலவர், நவாலியூர் சோமசுந்தரப்புலவர்,கலாநிதி நடேசபிள்ளை என தழிழ் கவிதைக்கு
வளம்சேர்த்தோர் பலர்.
இவர்கள் புலவர்கள்,வழிவழியாக மரபுத் தழிழ்க்கல்வி பயின்றவர்கள்.ஓசைச்சிறப்பும், கற்பனை வளமும், பொருள்நயமும் வாய்ந்த கவிதைகளை படைத்தவர்கள்.

எனினும் நவீன ஈழத் தழிழ் கவிதையின் தோற்றம் 1950களில் ஆரம்பிக்கிறது எனலாம். இதன்முன்னோடிகளாக மகாகவி, முருகையன்,நீலவாணன் என்போர் காணப்படுகின்றனர்.
மகாகவி – அக்கால வாழ்க்கை முறைகளை, கவிப்பொருளாக்கி பேச்சு வழக்கில் அமைந்த பேச்சோசையில் கவிதைகளை எழுதினார்.
உதாரணம்: தேரும்திங்கள்,அகலிகை, புள்ளியளவில் ஒரு பூச்சி என்பவற்றை கூறலாம். முக்கியமாக வீடும் வெளியும்;, குறும்பா, ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம் என்பன அவரின் கவிதைத் தொகுதிகளாகும்.
முருகையன் -மரபு வழியான , விஞ்ஞான கல்வியினூடான கண்ணோட்டத்தில் முக்கிய கவிதைகளை யாத்தார். மாடும் கயிறு அறுக்கும், நாங்கள் மனிதர்கள், ஒருவரம், ஆதிபகவன்,அதுஅவர்கள், இளநலம் உள்ளிட்ட 21 நூல்கள் ஆக்கியளித்தார்.
கவிஞர் நீலவாணன் கிழக்கிலங்கையில் இருந்து முகிழ்ந்தவர் நீலவாணன் கவிதைகள் ஒத்திகை எனும் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் பெரும்பாலும் மரபு வடிவங்களை கையாண்டனர். இறுக்கமான செய்யுள் நடையை தளர்த்தி இயல்பான பேச்சோசை சார்ந்த சந்தம் கொஞ்சும் கவிதை அமைப்பை கைக்கொண்டனர்.

இக்காலத்தில் எழுந்த முக்கியமான புதுக்கவிதையை – அதாவது ஓசை நயத்திலிருந்து விலகிய கவிதை எழுதியவர்கள் – தருமு சிவராமு, தா.இராமலிங்கம் என்போராவார்.
தருமு சிவராமு பிற்காலத்தில் இந்தியாவில் பிரமிள் என அறியப்பட்டவர். இவரின் கவிதைகளில் தமிழகத்தின் பிச்சமூர்த்தி, வல்லிக்கண்ணன்,கு.ப.ரா,போன்றவர்களின் சாயல் காணப்பட்டது..

தா.இராமலிங்கத்தின் – புதுமெய்க் கவிதைகள்,காணிக்கை என்ற நூல்களில் பல ஓசைப்பாங்கிலிருந்து விலகிய கவிதைகள் உள்ளன. இவரின் கவிதைகள் ஈழத்தின் நவீன கவிதையின் ஆரம்பப்புள்ளி என கருதப்படுகிறது.

60களில் மிகச்சில எண்ணிக்கையானவர்களே ஈழத்தில் புதுக்கவிதை எழுதுவதில் ஈடுபட்டனர். பின்நாளில் புதுக்கவிதைகளை சிறப்புற எழுதியவர்கள் என கருதப்பட்ட பலரும் ஆரம்பத்தில் மரபுரீதியான யாப்பமைதியுடைய கவிதைகளையே  எழுதினர்.          உதாரணம்: மு.பொன்னம்பலம், சு.வில்வரத்தினம்

70களில் மிக அதிக எண்ணிக்கையானவர்கள் ஈழத்தமிழ் கவிதைத் துறைக்குள் வந்துசேருகின்றனர்.இவர்களில் அனேகர் மரபு ரீதியான சந்த ஒசை தவழும் கவிதைகளை விலக்கி புதுக்கவிதைப் பாணியில் அமைந்த கவிதைகளை எழுதத் தலைப்பட்டனர். இதற்கு தழிழ் நாட்டில் ஏற்பட்ட கவிதை தொடர்பான கருத்தியல் மாற்றமும் காரணமாக இருந்தது எனலாம்.

சி.சிவசேகரம், ச.வே.பஞ்சாட்சரம், காரைசுந்தரம்பிள்ளை,  பா.சத்தியசீலன், சண்முகம்சிவலிங்கம், ஏ.எம்.நுஃமான், கவிஞர்கந்தவனம், அரியாலையூர்ஐயாத்துரை, காசிஆனந்தன், மு.பொன்னம்பலம், தா.இராமலிங்கம், சில்லையூர் செல்வராசன், சாருமதி, திக்வலை கமால்;,சு.வில்வரத்தினம், புதுவை இரத்தினதுரை, அ.யேசுராசா, மேமன்கவி, அன்பு ஜவாகர்ஷh, சோ.பத்மநாதன், கல்வயல் .வேகுமாரசாமி, பசுபதி, சுபத்திரன், மு.புஸ்பராஜன், சேரன், வ.ஜ.ச.ஜெயபாலன்,  போன்ற பலர் இக்காலத்தில் கவிதை துறையில் கூடியளவில் ஈடுபட்டனர். இவர்கள் 70களில் உத்வேகத்துடன் எழுத ஆரம்பித்து 80களிலும் அதன் பின்னும் கூடிய வீச்சுடன் கவிதைகளை படைத்தனர்.இக்காலத்தில் வாழ்ந்து வந்த  முதலிரு தலைமுறைகளை சேர்ந்தோரும் தொடர்ந்து எழுதினர்.

இக்கவிஞர்களின் கவிதைகள் யாவும் ஒரே மாதிரியானவையல்ல ! வகைமாதிரிகள் சில
01)முருகையன், சி.சிவசேகரம், ஏ.எம.;நுஃமான் என்போர் புலமைமிக்க
தனித்துவமான கவிமொழியை அறிமுகப்படுத்தினர்.
02)சண்முகம் சிவலிங்கம்,மு.பொன்னம்பலம்,தா.இராமலிங்கம் , சு.வில்வரத்தினம்,
அ.யேசுராசா   சொந்த அனுபவங்களையும் சமூக அவலங்களையும்
அரசியல் சார்ந்த நோக்கிலும் எழுதினர்.
03)சேரன், வ.ஜ.ச.ஜெயபாலன் என்போர் தரம்மிக்க புதுக்கவிதைகளை
படைத்தளித்தனர்.
04)புதுவை இரத்தினதுரை,பசுபதி ,சுபத்திரன், யாழ்வாணன்,போன்றோர் வர்க்க
அடிப்படை வாதத்தை தகர்த்து   சமூக மாற்றம் வேண்டிய கவிதைகளை
அதிகம் படைத்தனர்.
05)பா.சத்தியசீலன்,காரைசுந்தரம்பிள்ளை, காசிஆனந்தன், புதுவைஇரத்தினதுரை,
சோ.பத்மநாதன், ச.வே.பஞ்சாட்சரம், ,கல்வயல் வே.குமாரசாமி,
அரியாலையூர் ஐயாத்துரை  போன்றோர் மரபு வடிவங்களை தொடர்ந்து
பயன்படுத்தினர்.
06)புதுவை இரத்தினதுரை.சோ.பத்மநாதன், கவிஞர் கந்தவனம், அரியாலை
ஐயாத்துரை,ச.வே.பஞ்சாட்சரம்,பா.சத்தியசீலன்,கல்வயல்வே.குமாரசாமி
கவியரங்குகளில் பிரகாசித்தனர்.
07)சில்லையூர் செல்வராசன் – வானொலி கவிதைகளை ,கவிதை நாடகங்களை
அதிகளவு படைத்தார்.
08)மு.பொன்னம்பலம் ஆத்மார்த்தம் சார்ந்த கவிதைகளை எழுதினார்.
09)இக்காலத்தில்ச.வே.பஞ்சாட்சரம்.பண்டிதர்பரந்தாமன், புலவர் பார்வதிநாதசிவம்,
தில்லைச்சிவன் போன்றோர் இறுக்கமான யாப்பமைதி பிரளாத
கவிதைகள்  பாடினர்.
10)கவிதா நிகழ்வுகளில் சேரன், ந.சண்முகலிங்கன் ஆகியோர்
பங்கேற்றனர்.இது கவிதையும் நாடகமும் சார்ந்த ஒரு வடிவமாக
பல்கலைக்கழக மட்டத்தில் அறிமுகமானது.

80 களின் பின் இன எழுச்சி  கவிதைகள் முக்கியத்துவம் பெற்றன. 60,70,80 களில் வாழ்ந்து கொண்டிருந்த அனேகமான எல்லா கவிஞர்களும் இன எழுச்சி கவிதைகளை தம்தம் ஆற்;றலுக்கு ஏற்ப எழுதினர். 80களில் இவர்களுடன் புதிய இளைய தலைமுறையினர் பலர் கவிதை துறையில் காலடி பதித்தனர்.
சோலைக்கிளி ,இளவாலை விஜேந்திரன், ஊர்வசி. கம்சத்வனி. நிலாந்தன். வாசுதேவன்,நட்சத்திரன் செவ்விந்தியன்.ஜெ.கி.ஜெயசீலன், நாக சிவசிதம்பரம், ஒளவை,  இயக்கச்சி சி.கருணாகரன், சு.முரளிதரன். அஷ;ரப் சிகாப்தீன் என்போர் அவர்களில் சிலர்.
சோலைக்கிளி – புதுமையான உவமைகள் மூலம் பல தனித்துவமான கவிதைகளை படைத்தார். கிழக்கிலங்கையின் முஸ்ஸிம் கவிதைகளில் தனித்துவ அடையாளம் காட்டியவர் இவராவார்.
கல்வயல் குமாரசாமி – படிமம் குறியீடுகள் மூலம் கவிதை பாடும் உத்திகளை கையாண்டனர்.மரபுக் கவிதைகளில் இவற்றை திறம்பட பயன்படுத்தி கொண்டனர்.
வாசுதேவன் – மலையக கவிதைகளில் தனி அடையாளம் காட்டியவர்.
சு.முரளிதரன் – மலையக கவிதைகளில் தனித்துவ அடையாளம் காட்டியவர்.
ஜெ.கி.ஜெயசீலன், நாக சிவசிதம்பரம் – கவியரங்க கவிதைகளில் அதிகளவு ஈடுபட்டனர்.
இயக்கச்சி சி.கருணாகரன் – நவீன கவிதைகளை அதாவது .ஈழத்து புதுக்கவிதையில் அடுத்த கட்டக் கவிதையினை எழுதியவர்.
இக்காலச் சூழலும், தழிழுணர்ச்சியும்,  போராட்ட முனைப்புகளும் தழிழ் கவிதைக்கு முக்கிய இடம் தந்தது. இக்காலத்தில் புதுவை இரத்தினதுரை, சேரன், வ.ஐ.ச., ஜெயபாலன், சு.வில்வரத்தினம், இ.முருகையன் போன்றோர் பல பரிமாணம் மிக்க தனித்துவமான கவிதைகளை படைத்தனர்

இக் காலத்தில் வெளி வந்த கவிதைத் தொகுப்புகள் பல மிக பிரபலமாகி; செல்வாக்குப் பெற்றன.
1)பல கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு – மரணத்துள் வாழ்வோம்
11 ஈழக் கவிஞர்கள்
2) முருகையன் – மாடும் கயிறு அறுக்கும் , நாங்கள் மனிதர்கள்;
3) சேரன் – யமன், இரண்டாவது சூரிய உதயம், கானல்வரி
4) வ.ஐ.ச.ஜெயபாலன் – சூரியனொடு பேசுதல்
5) புதுவை இரத்தினதுரை – நினைவழியா நாட்கள்
6) சு.வில்வரத்தினம் – அகங்களும் முகங்களும் , காலத்துயர்
7) சணமுகம்; சிவலிங்கம் – நீர்வளையங்கள்
8) வாசுதேவன் – என்னில் விழும் நான்
9) சோலைக்கிளி – எட்டாவது நரகம், காகம் கலைத்த கனவு, பாம்பு நரம்பு
மனிதர், பனியில் மொழி எழுதி
90 களிலும் அதன்பின்பும்; வந்த கவிஞர்களாக விவேக்,நட்சத்திரன் செவ்விந்தியன், பா.அகிலன், த.சிவசங்கர், அஸ்வகோஸ், த.ஜெயசீலன் ச.முகுந்தன், அமரதாஸ், இயல்வாணன், சடாகோபன், சிதம்பரப்பிள்ளை சிவகுமார், முல்லை கோணேஸ், செ.பொ.சிவனேசு, தானா.விஸ்ணு, சித்தாந்தன், தி.திருக்குமரன், ஸ்ரீபிரசாந்தன், துவாரகன், இ.சு.முரளிதரன், ந.சத்தியபாலன் என்பவர்களை கூறலாம். இவர்களுடன் புலம்பெயர்ந்தவர்கள், போராளிக் கவிஞர்கள் என்போரும் இக்காலத்தில் தோற்றம் பெற்றனர்.
90களின் பின்வெளி வந்த முக்கிய கவிதைத் தொகுப்புகள் பின்வருமாறு:
01)சோ.பத்மநாதன் – வடக்கிருத்தல், தென்னிலங்கை கவிதைகள், நினைவுச் சுவடுகள்,
02)புதுவைஇரத்தினதுரை – பூவரசம் வேலியும் புலுணிக் குஞ்சுகளும்
03)மு.பொன்னம்பலம் – காலிலீலை
04)சேரன் – எலும்பு கூடுகளின் ஊர்வலம்,எரிந்து கொண்டிருக்கும் நேரம், நீ இப்பொழுது  இறங்கும் ஆறு
05)பா.அகிலன் – பகுங்குகுழி நாட்கள்
06)இயக்கச்சி.சி.கருணாகரன் -ஒரு பயணியின் நாட்குறிப்பு,ஒரு பொழுதுக்கு
காத்திருத்தல்
07)அஸ்வகோஸ்   –  வனத்தின் அழைப்பு
08)நட்சத்திரன்  செவ்விந்தியன்   – வசந்தம் 91
09)த.ஜெயசீலன் – கனவுகளின் எல்லை, கைகளுக்குள் சிக்காத காற்று
10)அமரதாஸ் – இயல்பினை அவாவுதல்
11)சித்தாந்தன் -காலத்தின் புன்னகை
12)ந.சத்தியபாலன் – இப்படியாயிற்று  101 வது தடவையும்

90 களின் பின் வந்த அனேக கவிஞர்கள் புதுக்கவிதை, நவீன கவிதைகளை படைத்தனர்.எனினும் த.ஜெயசீலன், ச.முகுந்தன் ஆகியோர் மரபு வடிவங்களை பயன்படுத்தினர்.

இக்காலத்தில் உருவாகிய பெண்கவிஞர்களாக -ஊர்வசி, சங்கரி, ஒளவை, மைத்திரேயி, சிவரமணி, செல்வி, உமையாள், நளாயினி, அனார், பாத்திமா ஜகான், பிரியதர்சினி என்போரை கூறலாம்.
இக்காலத்தில் தோன்றிய புலம்பெயர் கவிஞர்கள் பலர் காணப்படுகின்றனர். – 90களில் புலம்பெயர்ந்து சென்றவர்கள் இவர்களாவர். இவர்களின்; மூலம் புலம்பெயர் இலக்கியம் தோன்றியது. வ.ஜ.ச.ஜெயபாலன், மைத்ரேயி, இளவாலை விஜேந்திரன், ஆதவன், சபேசன், தம்பா, நட்சத்திரன்.செவ்விந்தியன், செல்வம், ரவி என்போர்கள் இக்காலத்தில் முக்கியமானவர்கள்.
போராளிக் கவிஞர்கள் – கஸ்தூரி, வானதி, வாஞ்சிநாதன், செழியன் என்போர்.
ஜெ.கி.ஜெயசீலன், நாகசிவசிதம்பரம், த.சிவசங்கர், த.ஜெயசீலன், ச.முகுந்தன், இ.சு.முரளிதரன், த.திருக்குமாரன் போன்றோர் கவியரங்குகளில் பங்கெடுத்தனர்.                       சோ.பத்மநாதன்,கல்வயல் குமாரசாமி போன்றோர் தொடர்ந்தும் கவியரங்குகளில் நாட்டம் செலுத்தினர்.
முருகையன், புதுவைஇரத்தினதுரை. சோபத்மநாதன் போன்றோர் இசைப்பாடல்களில் சிறப்பாக தம் திறமையை வெளிப்படுத்தினர்.
இவ்வாறாக ஈழத்தின் தழிழ் கவிதை வரலாறு- தீராத நதியாய் இளைய தலைமுறையை வரவேற்றபடி இன்றும் தெடர்ந்து ஒடிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.
ஆக்கம்:அருணன் (த.ஜெயசீலன்)

வாசகர் திருமுகம்

அன்புக்குரிய ஞானம் ஆசிரியருக்கு

114வது நவம்பர் மாத ஞானம் கிடைத்தது. எனது ‘சமகால ஈழத்தமிழ் கவிதை’-
ஒரு சுருக்கக் குறிப்பு  அதில் பிரசுரிக்கப்பட்டு இருந்தது.
பொதுவாக ஈழக் கவிதை விமர்சகர்கள்,அறிஞர்கள் அனைவருமே ஒரு
பட்டியலை ஒப்பித்தல், தமக்கு இசைவானவர்களின் பெயரைமட்டும் முன்னிலைப்
படுத்தல், தம்கருத்துக்கு உட்படாதவர்களை திட்டமிட்டு புறக்கணித்தல் போன்ற
விடயங்களை நன்கு கையாண்டமையை, கையாண்டு வருகின்றமையை கருத்தில்
கொண்டு ஈழக்கவிதைக்கு எவரெவர் எவ்வௌ; வகைகளில் பங்களிப்புச் செய்த-
னரோ அவர்களில் அனேகமாக அனைவரையும்,குழுமனப்பாங்கு இன்றி, என்
அறிவுக்கு எட்டிய வரையில் உள்வாங்க முயற்சித்து இருந்தேன்.

இதில் சில விடுபடல்கள் ஏற்பட்டு விட்டமை தவிர்க்க முடியாததே.

1. 80களில் தோற்றம் பெற்று எழுதிய வவுனியா திலீபன்,இளையவன் போன்றோரின்
பெயர்களும்,90களின் பின் தோன்றிய கிழக்கைச் சேர்ந்த,மலையகத்தைச் சேர்ந்த
சில கவிஞர்களின் பெயர்களும் விடுபட்டுவிட்டது.

2. 90களின் பின் வெளிவந்த பல நூல்களும் தவறவிடப்பட்டுவிட்டன.

உ-ம் 1. தான்தோன்றிக் கவிராயர்(சில்லையூர்)—ஊரடங்கப் பாடல்கள்
2. சி.சிவசேகரம் —-தேவி எழுந்தாள், வடலி, போரின் முகங்கள்,
மறப்பதற்கு அழைப்பு
3. ச. வே. பஞ்சாட்சரம் —நாடும் வீடும்
4. வே. ஐயாத்துரை —-கவிஞர் ஐயாத்துரை கவிதைகள்
5. வ. ஐ. ச. ஜெயபாலன் —-உயிர்த்தெழுகிற கவிதை
6. அ. யேசுராசா —-பனிமழை
7. மு. புஸ்பராஜன் —-மீண்டும் வரும் நாட்கள்
8. நிலாந்தன் —-ஓ யாழ்ப்பாணமே..யாழ்ப்பாணமே
9. சோலைக்கிளி —-வாத்து
10. அஷ;ரப் சிகாப்தீன் —-காணாமற் போனவர்கள்
11. ஒளவை —-எல்லை கடத்தல்
13. மைத்ரேயி —-கல்லறை நெருஞ்சிகள்
14. சடாகோபன் —-மண்ணில் தொலைந்த மனது தேடி
15. ஸ்ரீபிரசாந்தன் —நிமிர்நடை, அந்தரத்து உலாவுகிற சேதி
16. யாத்திரீகன் —உயிரோடிருத்தல்
17. கனிவுமதி —-அப்புறமென்ன, கட்டாந்தரை
18. செ. சுதர்சன் —-மற்றுமொரு மாலை
19. தவ.சஜீதரன் —-ஒளியின் மழலைகள்
20. கு. ரஜீபன் —-வலிகளைத் தாங்கி
21. பவித்ரன் —-உரசல் ஓசை
22. தானா விஷ;ணு —-நினைவுகள் மீழ்தல்
23. தீபச்செல்வன் —-பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
24. அனார் —-எனக்கு கவிதை முகம்
25. தி .திருக்குமரன் —திருக்குமரன் கவிதைகள்
26. இ. சு. முரளீதரன் —-நுங்கு விழிகள், நளதமயந்தி
27. துவாரகன் —மூச்சுக்காற்றால் நிறையும் வெளி
28 பெரிய ஐங்கரன் —எனக்கு மரணமில்லை, வானவில், ஞானக்கண்
29. பல கவிஞர்களின் தொகுப்பு
1.வேற்றாகி நின்ற வெளி
2.வெளிச்சம் கவிதைகள்

இவை சேர்க்கப் பட வேண்டும். இவ் விடுபடல்களுக்கு காலமும்,நேரமும்,சூழலும்,
தொடர்பற்றிருந்த நிலைமையும் காரணம் எனலாம் .மேலும் இதுவே முடிந்த முடிவு
அல்ல. இச் சுருக்கக் குறிப்பு விரிவு பெறும் சந்தர்ப்பத்தில் மேலதிக தகவல்கள்
இணைக்கப்படவும் வேண்டும். ஈழக் கவிதையின் பல்வேறு பரிமாணங்களும் பார
பட்சமின்றி ஆய்வுசெய்யப்படவும் வேண்டும்.

இது இவ்வாறிருக்க. 90களிலும் அதன் பின்பும் வந்த கவிஞர்களின்
பட்டியலில் என்னால் சேர்க்கப்பட்டிருந்த த.சிவசங்கர்,அஸ்வகோஸ்,த.ஜெயசீலன்,
ச.முகுந்தன்,அமரதாஸ்,இயல்வாணன் ஆகியோரின் பெயர்கள் விடுபட்டுள்ளன

இது தவறுதலாக நடந்ததா எனப்புரியவில்லை. ஏனைய விடயங்கள்
முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டுள்ள போதும் இவர்கள் ஆறு பேர்களதும் பெயர்கள்
மட்டும் புறக்கணிக்கப் பட்டீள்ளதா என்ற சந்தேகமும்,இவர்கள் கவிஞர்கள் இல்லை என ஞானம் கருதுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
நன்றி               (அருணன்    11.11.2009)

;

Leave a Reply