அன்(ம்)புவைத்தாய்!

அன்புப்பூ வைத்தேன் அகத்தால்
நான் நின்மேலே!
அன்புவைத்த என்மேல்
அன்பு வைக்க மாட்டாமல்
அம்புவைத்தாய்;
போலியாய் அன்புவைத்தாற் போல் நடித்தாய்!
அன்புவைத்தாய் என்று என்
அம்பறாவில் இருந்த ‘பல’
அம்புகளை முறித்தெறிந்துன்
அடியில் விழுந்தேனே…
அன்பு வைத்தாற் போல் நடித்து
அம்புகளை விட்டெறிந்தென்
அன்பைத் துளைத்தெறிந்து அகமெல்லம்
கோறை செய்து
அன்புக்கு ஏங்கி வீழ்ந்த… அடிமையாக்கி
வெற்றி கொண்டாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply