தீயைத் தெளிக்கும் தென்றல்

தீயினிலே இட்ட மெழுகாய் திகுதிகென்று
சீறி உருகி எரிந்து
தீக்கு உணவாகிப்
போகின்றேன்.. மேனி புகைந்து;
நின்பார்வை
தீயாகி என்னைச் சிதைத்த கதையையார்
ஏற்பார்கள்?
நீயோ சித்திரப் பதுமையென
மழலை அணில்களுடன் மலர்ப்பந்து விளையாடி
கலகலெனச் சிரிக்கின்றாய்!
கன்னக் குழிக்குளத்தில்
தேன்நிறைத்து எல்லோரும் திளைத்து
நீந்த வைக்கின்றாய்!
ஈர்த்தயலை ஆட்கொண்டு இதயங்களைக் கவரும்
காந்தமானாய்… ஆனாலோ
கடைக்கண் தணல் வீச்சை
என்மீது மட்டும் எறிந்து
குளிர்கலந்த
தென்றலினை ஏனையோரில் தெளித்து
நகர்கின்றாய்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply