விடியலென்ற ஒன்று இங்கு வாராதா?
வினையறுத்த நாட்கள் எம்மைக் கூடாதா?
அடிமையாம் விலங்குடைந்து நீறாதா?
அகதிவாழ்வு என்பதிங்கு வீழாதா?
கடினமான பாதைநாம் கடந்தோமே!
கடவுள் காக்கும் என்றுதான் இருந்தோமே!
மிடிசுமந்து நொந்து நொந் திடிந்தோமே!
விதியும் மாறவில்லை சோர்ந்து சாய்ந்தோமே!
அவர்கள் மீட்பர் என்று நம்பி வாழ்ந்தோம் நாம்.
அயலர் மீட்கவில்லை…தாழ்ந்து போனோம் காண்.
இவர்கள் மீட்பர் என்ற வார்த்தை கேட்டோம் யாம்.
இவரும் மேய்ப்பர் என்ற உண்மை தேர்ந்தோம் தான்.
சுவர்கள் நாலுபக்கம்…,தூக்கிக் காட்டாமல்
துவளவைக்கும் உலகம்: என்று பாய்வோம் நாம்?
கவலை என்ற வலையறுத்து மீள்வோம்…யாம்!
கடமைசெய்து உரிமைகேட்பின்…ஆழ்வோமாம்