எழுதல்

விழுதல் என்பது நிரந்தர வீழ்ச்சியல்ல!
எழுதல் மீண்டும் எழுதல்
இருப்பின்எங்கும்
விழுதல் என்பது நிரந்தர வீழ்ச்சியல்ல!
விழுதல் எழவே முடியா திருந்துவிட்டால்…
விழுதலும் நிச்சயமாய்
நிரந்தர வீழ்ச்சியாகும்!

விழுதல் நாம்நினையாப் பிரகாரம் நேர்ந்தாலும்
எழுதல் எங்களில்
தங்கியே இருந்திருக்கும்.
விழுதல் சாத்தியம்:
வீழ்ந்துபடல் வளமை:..ஆனால்
எழலும் நிமிரலும் அசாத்தியமா?
இல்லையில்லை!
விழுந்துதான் போனோம்:
எழ என்ன முயற்சிசெய்தோம்?
தூக்கிவிட யாருமில்லை,
துணைதரவும் நாதியில்லை,
நாமாய் முயன்றெழத்தான் வேண்டும்
அடிபட்ட
நாரியைப் பிடித்தபடி நாமிருந்தால்
இப்படியே
நோமுற்றித் தொடர்ந்து நோய்முற்றிப்
படுக்கையாகி
‘எழுச்சி என்பது இப்பிறப்பில் சாத்தியமே
இல்லை’ எனும் நிலையே எமக்குவரும்!
இப்பொழுதே
உன்னி முயன்று ஏதோவொன்றைப் பிடித்து
எழுந்து வலிபொறுத்து
அரைந்து நகர்ந்து ஒரு
மருந்தினையும் நாம்தேடி
மனதையும்நாம் தேற்றி
எழமுயற்சி செய்யாட்டி…எமைவீழ்த்த
நிற்போர்முன்
ஒருபோதும் எழுந்தெவரும்
வாகைசூட முடியாது!

(4314)

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply