நீ முதிர்ந்து விட்டாய். நீ கிழண்டி விட்டாய்.
தோன்றிற்று நரைதிரைகள்.
தோன்றிற்று நடைத்தளர்ச்சி.
தாலாட்டு நீபாட தொட்டிலிலே தவழ்ந்தவர்கள்
தாலாட்டுப் பாடுகிறார்
தமது பேரப் பிள்ளைகட்கு!
ஆனாலோ உன்பாட்டு அப்படியே
இளைய…ராஜன்
போல்…போய் வருகிறது நிதமும் புதிர்வியப்பாய்!
கேட்க இன்னுமின்னும் இளமையாயும்
ஆழ்ந்தகன்றும்
ஞான சொரூபியாகி
இனித்திடுது பரவசமாய்!
உன்மேல் முதுமை உரையெழுதிப் போனாலும்
உன்பாட்டு மேலும்
உயிர்ததும்பப் புத்துயிர்த்து
இன்றைய இளைஞனின்முன்
வலம்வருது இளையவனாய் !