மழைபார்த்த குருடன்

இரவெல்லாம் நல்ல மழையென்றேன் மகளிடத்தில்.
முறிந்த துயிலை
முழுதாய் உதறிவிட்டு
மழைவந்த தடத்தை,
மழைஉதிர்த்த வெள்ளத்தை,
மழையினது எஞ்சிநிற்கும் வாசத்தை
இரசித்தபடி
மழையிப்போ எங்கே மறைந்ததென எனைக்கேட்டாள்!
மழையெங்கே இருந்தென்
வீட்டுக்கு வந்ததென்றோ…
மழையிப்போ எங்கே
சென்று மறைந்ததென்றோ…
அறியாத
மழைபார்த்த குருடனானேன் அக்கணத்தில்!
(4074)

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply