‘மெல்விரல் இதழ்களைந்தைக் கொண்ட
கமலபாதம்…
கொல்லும் எரிமலைக் குழம்பாய்க் கொதிக்கின்ற
அனற்பாதை தன்னில்
அவிந்து பொரியாதோ?
இதழொவொன்றும் கருகாதோ?’
என்றென் இதயத்தை
பாதணிகள் ஆக்கியுன் பாதையோரம் நிற்கின்றேன்!
வேதனையை முகமுரைக்க…
பிடிவாதமாய் எந்தன்
பாதணியைப் புறக்கணித்தாய்!
இதயச் செருப்பறுந்து
தீய்கின்றேன்…
தெருவாம் எரிமலை நடுவில்யான்!