இயலாமையை உணரும் கணங்கள்

எழுதிய கவிதை எங்கே…நான் தேடுகிறேன்!
எழுதி இடையில்
இரண்டோர்சொல் செம்மையாக்கித்
திருத்திச் செதுக்குமுன்னே,
செல்வம் தொலைந்ததபோல்
கரம்விட்டுப் போயிற்றக் கவிதை:
எங்கேதான்
தொலைத்தேன் அக் காகிதத்தை
எனஎந்தன் நினைவுவெளி
முழுதையும் அலசி முயன்றும் கிடைக்காது
மறைந்தே தொலைந்துபோச்சென்
மனத்தைப் பதிந்த ‘சுதை’!
அந்தக் கவியை எழுதியவன் யான்..எனினும்
அந்தக் கவிதையினை
மனதினிலே மீட்டிசைக்க..,
அந்தக் கவிதையை அதேNபுhல மீட்டெழுத..,
முடியா இயலாமை முறைத்து
எனைப்பழிக்க
எழுதுகையில்…வந்து வீழுந்தசொற் கோவைபற்றி
நினைவு மறந்துபோக நிலைகுலைந்தேன்:
அக்கவியைப்
பறிகொடுத்த ‘புத்திர சோகத்தில்’  துடிக்கின்றேன்!
என்கவியில் அது ஓர்
எண்ணிக்கை எனினும்…அதை
இன்று பறிகொடுத்து…
மீட்டெழுத முடியாத
எந்தன் இயலாமை தனைக்கண்டேன்:
தலைகுனிந்தேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply