உலகியல்

வல்ல உலகில்,
வரத்தைவிடச் சாபத்தை
அள்ளி வளங்கி ஆனந்தப் படும் உலகில்
எத்தனையோ சுத்து மாத்து
அரசியல்கள்
சத்தியத்தை விற்றுச் சாதிக்கும் பூவுலகில்,
மற்றவனைத் தட்டிச் சுற்றி
மடக்கிலாபம்
பெற்றால் மகிழ்ந்துவாழ்த்திப்
பெருமைப் படும்உலகில்,
பணமொன்றே வாழ்வாய்…
பணமொன்றே குறியாய்…
பணமொன்றால் மட்டும் பெரியோர் சிறியோரை
கணிக்கின்ற இவ்வுலகில்,
கணக்கு விடுவோரை
வெல்கின்ற வல்லோரின்
வெளிவேசம் வாழ்ந்திடையில்
மனிதாபி மானமோ…மனிதக் குணமோ…
பெறுமதி எதுவுமற்று
தெருப்பிச்சைக் காரனென
அவமானஞ் சுமந்து
அலைகின்ற பேருலகில்,
எங்கே எனக்குக் குழிபறிப்போம்…
எனப்பகைவர்
தங்களை நண்பரெனச் சொல்லிநிற்கும் நட்புலகில்,
வலிமை படைத்துவிட்டால்
வசதி பெறும்உலகில்,
மெலியோர் திறனிருந்தும்
வீழ்ந்து படுமுலகில்,
தடைகளைத் தகர்க்க…
தீமையை எரிக்க…
அதர்மத்தை எதிர்த்து அணிவகுக்க
ஒருஓர்மம்
இல்லாட்டில் எதுஞ்செய்ய ஏலாதுÉ
இவ்வுலகின்
பொல்லாப்புக்கு அஞ்சிநின்றால்
புதுமைசெய்ய முடியாது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply