தெய்வத் திருமகள்

கையில் உருகிக் கரையும் பனிமலர்.
கண்களில் ஒளி ததும்பும் சிறுசுடர்.
பொய்மையற்ற சிரிப்பில்…என்உயிரெனும்
பூவை வாடாத மல்லிகை ஆக்கியே…
உய்ய வைக்கும் பஞ்சுளூ எனது உணர்ச்சியில்
உருவெடுத்துத் தவளும் பேரழகிது.
ஐயகோ அழுதழுது துடித்தாலும்
அணைக்க அன்பைப் பெருக்கும் கற்பகதரு!

வாழ்வின் அர்த்தமாய் வாய்த்த மலரிவள்.
வரமாய்..செய்த தவத்தாற் கிடைத்தவள்.
ஊழ்த் தொடர்பால் என் உறவென வந்தவள்.
உருவம் செயலில் என் விம்பமாய் நிற்பவள்.
வீட்டின் இரண்டாம் குத்து விளக்கென
விளைந்தவள்ளூ ‘ஐயோ பாவம்’ என்றென்னையே
பார்க்கும் நண்பர்காள்! செல்வம் இவள்ளூ நாளை
பாரை ஆண்டெனைப் பார்ப்பள்…திருமகள்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply