பழக்க வழக்கம்

மந்தைகளாய் நாங்கள் வாழும்வரை…நீங்கள்
சந்தேகம் இல்லாமல்
மேய்ப்பர்கள் ஆவீர்கள்!
மந்தைகள் அல்லநாம் மனிதர்ளூ
இதை உணரோம்.
மேய்ப்பர்களும் மனிதர் என்பதனை நீருணரீர்.
மந்தைகள்நாம்.. மேய்ப்பருமை
மீட்பரென எண்ணுவதை
எந்தத் தயக்கமுமே இன்றிநீவிர்…பாவிப்பீர்.

மந்தைகள்நாம் என்பதைநாம்
இன்றுமீண்டும் நிரூபித்தோம்.
மேய்ப்பர்நீர் என்பதனை நிமிர்ந்துசொன்னீர்ளூ
தலையசைத்தோம்.
உங்களது கைகளிலே
இல்லை…கயிறு கம்பு!
எம்கால் கழுத்தினையும் பிணைக்கலைகாண்
நுகக்கயிறு!
என்றாலும் எதற்கும் இணங்கி
அடிபணிந்து
அற்பத் தனங்களுக்கு
ஆட்பட் டலைகின்ற
எங்கள் இழிகுணத்தால்
வெறுமனே விழியுருட்டி..,
மேய்ப்பர்நீர்.. வெல்கின்றீர்!
மிரட்சி படிந்திருக்க
நடுங்கும் குரல்,கை,கால் நர்த்தனமிட நாங்கள்
மறுபடி மந்தைகளாய் மாற
இன்றும் தயாரானோம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply