காலம் போடும் கணக்கு

நாமோர் கணக்கை நமக்கேற்றபடி போட
தானோர் கணக்கைத்
தனக்கேற்றபடி காலம்
போடுவதைக் கண்டும் புரியாத மாதிரியாய்க்
கற்பனைக் கோட்டைகள்
கட்டிக்கொண் டிருக்கின்ற
அற்பர்கள் நாங்கள்ளூ
இதை யாரும் உணர்ந்தோமா?

அதிகாரம் நெஞ்சில் ஆணவம் வளர்க்க
எதையுமே செய்யவல்ல
இருகை கால் தினவெடுக்க
விதியையும் மாற்றி எழுதும்
மிகுதுணிவில்
இறைவனுக்கு நிகரென்று எழுந்து
நினைத்தவாறு
தலையெடுப்போர் தங்கள் சகலகலா வல்லமையால்
எமனணுக ஏலா இடமிருந்து
குதூகலிக்க
எமனின் சிரிப்பவரின்
இதயத்துள் கேட்குமென்றால்…
காலத்தின் நடுநிலை தவறாக் கணக்காய்வு,
காலத்தின் அறத்தீர்ப்பு,
காலத்தின் முடிவு
யாருக்கும் சாராமல் நடக்கும் அதன்இயல்பு,
இம்மியும் பிசகாது
தொடரும் அதன்நி;யாயம்
புரிந்திடணும் உங்களுக்கு!
இயற்கையுடன் மோதாமல்
காலத்தை ஏய்க்;காமல்
காலத்தைப் பகைக்காமல்
காலத்தின் வழியோடி நாம்கணக்குப்
போட்டுவாழ்ந்தால்
அதைக் காலம் ஏற்றுவிடும்ளூ
வாழ்ந்திடலாம் பெருவாழ்வு!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply