சி.கங்காதரன்

சி.கங்காதரன்,
வேதர்அடைப்பு,
காரைநகர்.
10.06.2013.

அன்புடன் கவிஞர் ஜெயசீலன் அவர்களிற்கு,

“எழுதாத ஒரு கவிதைக்கு எழுதுகிறேன் (பதில்) ஒரு கவிதை”
கவிதை என்பது எழுதுவது அல்ல, உணர்வது. நமது எண்ண அலைகளை, உண்மை நிலைகளை ஊமையாக இருக்கின்ற உள்ளத்தை கவிஞர்களிற்கு உணர்த்துவது, மொழி ஒரு ஆயுதம், அதை பயன்படுத்துவதில் ஆனந்த கவிஞர்களிற்கு. மொழி வந்ததா? அது ஆய்விற்குரிய மௌன மொழிபேசி அம்மாவிடம் விளையாடி ஒளவைப் பாட்டி கதைகேட்டு கருத்து அறிந்து காகிதத்தில் ஓடம் செய்து மழையில் மகிழ்;ந்து அரிச்சுவடியில் ‘அ’ பயின்று பாதைநடந்து, மெல்ல வகுப்பேறி, வயதும்மாறி, வாலிபம்வந்து, வாய்ச்சேட்டைகளை செய்து, பள்ளிக்கூடம் சென்று,‘சினிமாப்படம்’ பார்த்து ‘நாயகன்’ நான் என எண்ணி என்னவளை ‘நாயகியாக்கி’ கற்பனையில் கானல்நீரில் “காதல்டூயட்” பாடி, வாழ்வின் வசந்தத்தை வறுமையுடன் தொலைத்து, பணம் இருந்தும் வறியவனாய்,ஊதாரியாய், அறிவு இருந்தும், அடிமுட்டாளாய், தேடல் இன்றி தேவையற்றவற்றைத் தேடி, சேராத இடம்தன்னில் சேர்ந்து, என்னை அழிக்க நினைப்பவனிற்கு, நானும் உடந்தையாகி, உடனிருந்து கொள்ளியை அடியவன் நானே கொடுத்து என் குல கௌரவங்களை மறந்து, எல்லோருக்கும் நல்லவனாய், நன்றாக நடித்து “சுயம்” இல்லாமல் சுதந்திரமாகத் திரிந்து காட்டாற்று வெள்ளம்போல, கண்டஇடம், திரிந்து மனதால் இணையாமல் உடலால் இணையும், உண்மையற்ற ஊத்தை உறவுகளுடன் கலந்து, பால் பாழாகி, நஞ்சு தலைக்கேறி, நானிலத்தில் நான்விழும்வேளை, என்விலாசம், விழலாகி, எல்லோரிற்கும் பாடுபொருளாகி என்னைக் கெடுத்தவர்கள், அரக்கர்போல் சிரிக்கும் வேளை, எங்கிருந்தோ வந்த “இறைவேதம்” என்மூச்சோடு முட்டி என்பழி, பாவம், அநியாயம், அக்கிரமம் எனக்கு உணர்த்தி என்னை நானே சீர்தூக்கி, சரியான தராசில் என்தன்னை நானே நிலைநிறுத்தி
நிறுத்துப் பார்த்தபோது, நிலைதடுமாறி நானே எனக்கு எதிரியாகி எள்ளி நகையாடி செய்தேன்.
ஒரு விதி, அதுவே என் வாழ்வின் விதி. விதி நடக்கும் போது வாகனங்கள் வரும்போதும் பாதை செல்லும் தூரம் பள்ளம் மேடாய்த் தெரியும் கற்கள், முட்கள், கலந்து பாதத்தில் இரத்தம் கசியும், இருந்தாலும், எழுந்தாலும் நடந்தாலும், ஓடினாலும் இளைப்பாறினாலும், எல்லையை அடையும் வரை துணை வரும் ஓர் இயற்கை இன்பப் பொருள், இரட்டிப்பாய் இழந்தவை தரும். துர இருக்கும் எங்களுடன் என்றும் வரும் இணையற்ற எழுதாத ஒரு கவிதை இறையருளே.
“எழுதாத ஒரு கவிதை இறை இயற்கை ஒன்றே” இயற்கையை எழுதினால் ரசிக்க முடியாது, ரசிக்கும் இயற்கையை மொழியில் கூற முடியாது. மௌனமே மொழி இயற்கையே வழி”

என்றும் அன்புடன்,
காரை எஸ் .கெங்கா.