காரை ளு.கெங்காதரன்

.சி.கெங்காதரன்,
வேதர் அடைப்பு,
காரைநகர்,
மதிப்பிற்குரிய சேர்,
முயன்று முயன்று இயன்றவரை எழுதும்,
இனிய இளம் கவிஞரிற்கு,
நலம் தரும் நல் வாழ்த்துக்களோடு நிலம் தனில் தங்கள் கவிதை “நித்திலம்” போல நிமிர்ந்து நிற்க,
நானிலமும் நானும் போற்றும் வாழ்த்தும் நல்ல நேர்காணல் நேர்த்தியாக வழங்கி, வாசகர்களை உம் வசமாக்கி வாசம் மாறாத வாடாத மலர்போல மனங்களில் இடம் கொண்டு வையகம் தன்னில் வானுயர் கவிமழை கனியத்தந்து, “கைகளிற்குள் சிக்காத காற்றாக” வந்து இன்பம் தந்து என்றுமே அழியாத காற்றாக, காற்றுக் கவிஞனாக,“புயல்மழைக்குப் பின்னான பொழுதாக” பாடல் தந்து பாவலர்கள் பலர் பார்த்து நிற்க பாவலரிற்குப் பாவலராகி, தரமான நடுவர்களால் தாராளமாகப் தட்டித்தரப்பட்டு மெல்ல, மெல்ல, நடந்து அவதானத்துடன், சிரமப்பட்டு ‘சிகரம்’ தொட முனையும் முயற்சியாளரே நாம் தொடர்பு பட்டது. முள்வினை முன்பயன் அல்லவா? தங்களுடன் நான் இணைந்ததில், தங்களிடம் தமிழும், கவிதையும், எளிமையும் ஒழுக்கமும் ஓரளவு கற்றோ தொடர்ந்தும் கற்றுவரப் பயிற்சி செய்கிறேன். மீண்டும் ஒரு நல்ல இலக்கிய விழாவில் இன்முகத்துடன் சந்திப்போம். தங்கள் கவி விரல்கள் வாழ்க.

வாசகன்,
காரை,ளு.கெங்காதரன்.