முறித்திருக்க வேண்டும் முளையினிலே
வளர்ந்தபின்தான்
அறிய முடிந்தது நீ…முட் செடியென்று!
இளமையிலே முட்களை எப்படி மறைத்துவைத்தாய்?
வளர வளரச் செடியே முள் ஆகிநின்றாய்!
முள்ளாற்தான் முள்ளை
முறிக்க முடியும்…என்மேல்
முள்ளில்லை… ‘பற்றும்’
தந்துகளோ டென்செய்வேன்?
உனைப்புரிந்து உன்னுறவை உதறி
நட்பைச் சாய்த்து வீழ்த்தி
எனதுயிரைக் காத்தேன்!
எனினும் உன் முள்கிழித்த
இரணங்களினை இன்றுவரை ஆற்றும் வழியறியேன்!
இரணங்கள் வடுக்களாச்சு…
எழுபிறப்பும் சுமக்கவுள்ளேன்!