நீ வகுத்த பாதை

கால்கள் நடந்துளன!
நான்நினைத்த திசையெங்கும்
கால்கள் நடந்தனவா?
‘இல்லை’ என்றே கருதுகிறேன்.
கால்நடக்கும் பாதை
நான்நினைத்த பாதையில்லை.
நான்நினைக்கும் பாதையிலே…கால்நகர்தல்
நிகழுதில்லை.
‘யார்வகுத்த பாதை கால்நடக்கும் பாதை’ கேட்டேன்?
நீவகுத்த பாதையென்று
நெஞ்சால் உணர்கின்றேன்.
நான்நினைத்த பாதையில் நடந்திருந்தால்
இன்றெங்கோ
போய்முடிந்து போயிருப்பேன்ளூ
நீஎன்னை விதிக்கயிற்றால்
பார்த்திழுக்கப் பாதை பலமாறி
தப்பியொட்டி
நூறுவீதம் தோற்காதும்,
நூறுவீதம் வெல்லாதும்,
நானோர் யதார்த்த நதிவழியே நகர்ந்துள்ளேன்.
கால்கள் நடந்துளன…
நான்நினைத்த படியெனது
கால்கள் நடக்கவில்லை காண்கின்றேன்.
அதேநேரம்
நீவிரும்பாப் பாதையிலும் நிச்சயமாய்
என்இரண்டு
கால்கள் நடக்காது…
கவலையின்றி நடக்கின்றேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply