‘போர் சுதந்திர மாக நடந்தது!
போர் சுதந்திரம் மீட்டு முடிந்தது!
போர் துயர்களைச் சாய்த்து ஜெயித்தது!
போர் புதுவிதி யாத்து இரசித்தது!
போர் புதுயுகம் தீட்டி எடுத்தது!
போர் அமைதியைக் காத்து வளர்த்தது!
போர் பிரச்சனைத் தோற்றுவாய்ப் புள்ளியை
பொசுக்கிச் சமநீதி யாருக்கும் தந்தது!
போர் புரிந்தோர்க்கு வாழ்வைக் கொடுத்து.
போர் நசிந்தோரின் சுமையை இறக்கிற்று.
போர் நலிந்தோர்க்குப் பூக்கள் வளங்கிற்று.
போர் இம்மண்ணுக்குப் புதுமை புரிந்தது..’
வேர் அறுந்து விழுதும் தொலைந்துள்ள
வீதியோர விருட்சங்கள் யாவுக்கும்…
காற்று இப்படிச் சொல்லி நகர்ந்தது!
கைகள் தட்டிய வான்…பின் மறந்தது!