நல்லாயன்

ஆட்டுமந் தைகளிடை ஆயனெனக்
குவியலான
முகில்களுகளுக்கு நடுவில் முழுநிலவு!
இடைக்கிடை
நகர்ந்து ஒன்றையொன்று முட்டி
விண்மீன்களினை
மேய்ந்துளன ஆடுகள்!
தென்னை தலைசாய்க்க
அடிக்கடி காற்று ஆடுகளை விரட்டுகையில்
மேய்ப்பனும் ஆடுகள்பின்
ஓடுவதாய்ப் படுகிறது!
மேய்ப்பனது விம்பம் அயற்குளத்தில்
பிணமாக
மிதப்பதனைக் கண்டு
விட்டுவிட்டு நாயொன்று
தொண்டை கிழியக் குலைத்துத் தொலைக்கிறது!
பார்த்துக் கொண் டிருக்கிறேன்…இவ்
மேய்ப்பனது பாலொளியை
அவனது மந்தைகள்தான்
மறைத்து விளையாடியன…!
என்நினைவோ,
காற்றின் கரமோ,
நாயூளையதோ,
மேய்பனொளி தனை மறைக்க முடியாது
தோற்றுளன!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply