புன்னகையைக் களவாடிப் போன கொடுங்காலம்
புன்னகையைப் பொன்னகையாய் அடைவிருந்து மீட்கட்டும்.
மண்ணெங்கும் வேர்விட்டு மரங்கள் நிமிரட்டும்.
அன்று முறிந்தகிளை அனைத்தும் துளிர்க்கட்டும்.
பொன்னொச்சி யோடு பூவரசும் பூக்கட்டும்.
என்றும் வரண்டு முகில்களற்று இருந்தவானில்
ஒன்றாய்த் திரண்டுமழை முகில் கூடி ஆடி..மூழும்
துன்ப அனல்மீது துளிவீழ்ந்து நூர்க்கட்டும்.
நம்பிக் கையினது நதிமூலம் தேடினோமே…
எம்கைக்குள் உளது அதுளூ இன்று ஏன் மறந்தோம்?
சம்பவமாய்ப் போகக் கூடாதெம் தலையெழுத்து
சரித்திரமாய் மாறத் தடையெல்லாம் நாமுடைப்போம்.
தெம்புடுத்துக் கொண்டோம்! திசைக்கொன்றாய்ப் பறந்தோடி
அம்புக்கிரை யாகாது..அரசியலால் ஒன்றாவோம்.!
எம்பெருமை நாமுணர்வோம்!அதையெவரும் ஏற்கவைப்போம்!
நம்பலங்கள் நம்மிடந்தான்!அதைப்புரிவோம்…பயணிப்போம்!