நேர்காணல்
யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை மாணவரின் ஆய்வுக்காக அண்மையில் என்னால் வழங்கப்பட்டநேர்காணல்
1. உங்களைப் பற்றிக் கூறுங்கள்
கடந்த 20 வருடங்களாககவிதைத்துறையில் ஈடுபட்டுவருகின்றேன். என் வாழ்வின் அர்த்தம் கவிதைத்துறையில் ஈடுபடுவதேஎனக் கருதுகிறேன். எத்தனைபதவிகளையும்,பட்டங்களையும் பெற்றுவிடமுடியும். ஆனால் காலத்தின் கண்ணாடியாகவிளங்கும் கவிஞனாகவாழுவதுபெறுதற்கரியது. தமிழின் வயதுடனும்,தமிழைப் பயின்றவர்கள் தமிழைப் பேசியவர்களுடனும் ஒப்பிடும் போதுவிரல்விட்டுஎண்ணிவிடக்கூடியவர்களேதமிழின் பெருங்கவிஞர்களாக,தமிழைஉயர்த்திவைப்பார்களாகதிகழ்கிறார்கள். அவர்களில் ஒருவனாக,ஒருகவிஞனாகமாறநானும் முயல்கிறேன்.
2. உங்கள் ஊர்,உறவுகள் பற்றி..
எனதுபூர்வீகம்,சொந்த இடம் யாழ்ப்பாணத்தின் நல்லூர். கவிதைத்துறையின் அறிமுகத்தால் ஊரெல்லாம் எனக்குஉறவுகள் உண்டு.
3. உங்கள் குடும்பச் சூழல் பற்றி கூறுங்கள்…
தாய் தந்தையர் நல்லூரில் வாழ்கிறார்கள்,ஒருசகோதரி. மனைவிஆசிரியை இரு புத்திரிகள் எனதுசெல்வங்கள்
4. கவிதைத்துறையில் உங்கள் ஈடுபாடுசென்றமைக்கானகாரணம் யாது?
இயல்பானவிருப்பம்,கவிதைகளைகேட்டதில் நுகர்ந்ததில் ஏற்பட்டஆர்வம்,கவிதைகளுடன் ஊடாடி இரசித்ததில் ஏற்பட்டசுகம் என்பனகாரணங்கள். எங்கோசென்றுகொண்டிருந்தவன் எதிர்பாராஒருபுள்ளியில் கவிதைவெளிக்குள் வந்துசேர்ந்தேன்,வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்.
5. இத்துறையில் உங்களதுவளர்ச்சி பற்றி
இருபதுவருடங்கள் கவிதைத்துறைபற்றிஓரளவுஅனுபவம் பெற்றிருக்கிறேன். பல்வேறுபட்டகவிதைகளை,கவிஞர்களை இரசித்திருகிறேன். எனதுகவிதைநோக்கில்,வெளிப்பாட்டில் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் புதிதுதேடும் தேடல் தொடர்கிறது. வளர்ச்சியின்உச்சம் ஃமுடிவுஎதுஎன்பதனைஎவரறிவர்? தினமும் பயணம் நகர்கிறது.
6. உங்களது’கவிதைத் தொகுப்புகள்’ பற்றிசற்றுவிபரமாக கூறுங்கள்?
நான் எழுதியபலநூறு கவிதைகள் பிரசுரமாகாமல் என்னிடம் உள்ளன. இலங்கையில் பத்திரிகைகள்,சஞ்சிகைகளில் பலபிரசுரிக்கப்பட்டன. வானொலிநிகழ்ச்சிகளில் சிலவாசிக்கப்பட்டன. என்னால் தொகுக்கப்பட்டகவிதைத் தொகுதிகள் மூன்று இதுவரைவெளிவந்துள்ளன. இத்தொகுதிகள் எனதுதனிப்பட்டமுயற்சியால்,என் சொந்தச் செலவில் வெளியிடப்பட்டன. 2001 இல் ‘கனவுகளின் எல்லை’, 2004 இல் ‘கைகளுக்குள் சிக்காதகாற்று’, 2013 இல் ‘ எழுதாதஒருகவிதை’என்பனஅவையாகும்.
7. உங்களது இந்தஆளுமையைவளர்த்தஆசிரியர்கள் பற்றிக் கூறுங்கள்?
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் கல்விபயின்றபோதுஆசிரியர் கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் நான் கவிதைஎழுதத் தூண்டினார். தமிழாசான் க.சொக்கலிங்கம்(சொக்கன்) அவர்களிடம் தமிழ் படித்தேன். ஈழத்தின் மூத்தகவிஞர் இ.முருகையனிடம் கவிதையாப்பு இலக்கணம் கற்றேன். கவிஞர் சோ.பத்மநாதனிடம் இடைக்கிடைகலந்துரையாடிகவிதையைச் செம்மைப்படுத்துகின்றேன்.
8. உங்களுடையஆரம்பகல்வி,அதன் வளர்ச்சிபற்றி?
ஆரம்பக் கல்வியாழ். நல்லூர் மங்கையற்கரசிவித்தியாலத்தில் கற்றேன்.பின் 5ம் ஆண்டுபுலமைப்பரிசில் பரீட்சையில் தேறியாழ். இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரைகற்றேன். உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் சித்தியெய்;தியாழ் பல்கலைக்கழகவிஞ்ஞானமானிப் பட்டம் பெற்றேன். பின் குடிசனஅபிவிருத்திகற்கைநெறியில் முதுகலைமானிப்பட்டம் பெற்றுள்ளேன்.
9. உங்களுடையவளர்ச்சியில் யார் யார் முக்கியமானவர்கள் எனக் கருதுகிறீர்கள்?
எனதுபெற்றோர் முக்கியமானவர்கள். ஆசிரியர்களானச.வே.பஞ்சாட்சரம்,பண்டிதர் க.சொக்கலிங்கம்,என்னைகவியரங்கில் ஏற்றிஉலகறியச் செய்தஅகில இலங்கைகம்பன் கழகஅமைப்பாளர் கம்பவாரிதி இ.ஜெயராஜ்,எனக்குகவிதையாப்புகற்றுத்தந்தகவிஞர் இ.முருகையன்,என் முதற் கவிதையைப் பிரசுரித்த’சாளரம்’சஞ்சிகையின் ஆசிரியர் கவிஞர் விவேக்,என் ஆரம்பகாலகவிதைகளில் சிலதைபிரசுரித்தசிரித்திரன் சஞ்சிகையின் ஆசிரியர் சிரித்திரன் சிவஞானசுந்தரம் இதயசங்கம்,கவிதைகலசம் போன்ற இலங்கைவானொலிநிகழ்ச்சிகளில் எனதுகவிதைகளைபயன்படுத்தியநிகழ்ச்சிதயாரிப்பாளர்கள்,தற்போதஎன் குடும்பத்தினர் எனப்பலர் என் வளர்ச்சியில் பங்கெடுத்துள்ளனர்.
10. உங்களுடையவளர்ச்சியில் நண்பர்களின் பங்கு
எனக்குதனிப்பட்டநண்பர்களைவிடகவிதையால் கிடைத்தநண்பர்கள் அனேகம். இதற்குவயதுவேறுபாடில்லை. எண்ணற்றநண்பர்களின் அன்பும்,ஆதரவும்,அரவணைப்பும் ஆக்கபூர்வமானவிமர்சனமும்,விவாதமும் என்னைதினமும் புடம்போட்டிருக்கின்றன.
11. உங்கள் கவிதைகள் தொடர்பானவிமர்சனங்கள் எவ்வாறுஅமைந்தன?
நேர்மையானபலவிமர்சனங்கள் என் கவிதைகளின் குறைநிறைகளைக் கூறி இரசித்துசிலாகிக்கும் பலவிமர்சனங்கள் தொடர்ந்துகிடைத்துவருகின்றன. கவிதைஎன்றால் என்னஎன்பதைமறந்துகவித்துவத்தைமறுதலித்துதமதுகுழுவை,வட்டத்தை,கருத்தை,கொள்கைகோட்பாட்டைநான் பின்பற்றாமல் போனதால் என் கவிதைகளைகண்டும் காணாமல் போகும் சிலரும் உள்ளனர். எதிர்மறையானசிலகருத்துக்களைநான் கேட்டதுண்டு. தவறுகளைதிருத்தியிருக்கின்றேன். செம்மைபடுத்தவேண்டியவற்றைசெம்மைபடுத்தியிருக்கின்றேன். எனக்கென்றுகவிதைதொடர்பானகோட்பாடுஉண்டு. அதைநான் யாரிலும் திணிப்பதில்லை. பொதுவாகநேர்மறையானஃஎதிர்மறையானவிமர்சனங்கள் எவையெனினும் அவைபற்றிநான் பெரிதாகஅலட்டிக்கொள்வதில்லை. அனேகமாகஎல்லாவிமர்சகர்களுமே’நடுநிலைமை’யைதாண்டிதம் விருப்புவெறுப்புகளுடனேயேவிமர்சனங்களைமுன்வைக்கிறார்கள். படைப்புபிரசவத்தைபடைப்பாளி கஷ்ரப்பட்டுபிரசவிக்கவிமர்சகன் மிகச்சுலபமாகஉண்டுஃ இல்லைஎனதீர்பெழுதிவிடுகிறான். நான் காலத்தின் விமர்சனத்தையே,தீரப்;பையேபெரிதாகமதிக்கின்றேன்.
12. தற்போதையஉங்கள் இலக்கியப் பயணம் பற்றி
எனது மூன்றாம் கவிதைதொகுதிஅண்மையிலேயேவெளிவந்துள்ளது. தினமும் ஒருதவம்போலகவிதையுடன் ஊடாடிக்கொண்டிருக்கின்றேன்.
13. உங்களுக்குகிடைத்த பரிசு பாராட்டுக்கள் பற்றி
பலபரிசுபாராட்டுக்கள் கிடைத்துள்ளன. 1995 ம் ஆண்டுபடைப்பாளியும் விமர்சகருமானஅ.யேசுராசாநடத்திய’கவிதை’ இதழில் கவிதைப்போட்டியில் எனக்குமுதலாம் பரிசுகிடைத்தது. பின் பல்வேறுபோட்டிகளில் பரிசுகள் பதங்கங்கள் கிடைத்தன. ஆகில இலங்கைக் கம்பன் கழகம் நடாத்தியகவிதைப்போட்டியில் பரிசுகிடைக்காதபோதும் 1993 ல் கம்பன் விழாகவியரங்கில் கவிதைபாடும் வாய்ப்புகிடைத்தது. பல்கலைக்கழகவிஞ்ஞானபீடத்தில் பயின்ற மூன்றுஆண்டுகளும் பீடமட்டகவிதைப்போட்டியில் முதற்பரிசுபெற்றேன். எனதுமுதலிருகவிதைதொகுதிகளுக்கும் மாகாணமட்டசிறந்த நூலுக்கானவிருதும் இலக்கியபேரவைவிருதும் கிடைத்தது. எனது 2ம் தொகுதி’கைக்குள் சிக்காதகாற்று’அவ்வாண்டுவெளிவந்தமிகச்சிறந்தகவிதைத் தொகுப்புஎனதமிழ்நாட்டின் பிரபலஎழுத்தாளர் சுஜாதாதெரிவுசெய்தார்.
14. எல்லாப் படைப்பாளர்களுக்கும் பொதுவாகநீங்கள் சொல்லும் கருத்து
இயல்பானஆற்றலை இனங்கண்டுஅதனைவிகசிக்கச்செய்ய,உரியவழிகளில் தொடர்புபட்டவிடயங்களைஆழ்ந்துகற்கவேண்டும். தொடர்ச்சியானபரவலானவாசிப்பும் தேடலும் படைப்பாற்றலைபட்டைதீட்டிஒளிரவைக்கும். பொய்யாக,போலியாக,பிறரைதிருப்திப்படுத்த,வேறொருவனைஏமாற்றஒன்றைப்போல்பிரதிபண்ணிபடைக்கப்படும் படைப்புக்கள் காலவெள்ளத்தில் கரைந்துபோகும். சுயமான, இயல்பான,தனித்துவம்மிக்க இயற்கையின் உண்மையைபேசுகின்றஎமதுவிழுமிய இயல்புகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றகாலத்தின் கண்ணாடியானபடைப்புக்கள் என்றென்றும் நிரந்தரமாகவாழும். ஆன்மீகநாட்டமும்,தத்துவப்பார்வையும்,நவீனஉலக இலக்கியபரீட்சயமும்,படைப்பாளுமையைவளர்த்தெடுக்கும்.
15. தாங்கள் ஒருஎழுத்தாளன் என்றவகையில் மக்களுக்குஎன்ன கூற விரும்புகிறீர்கள்?
மக்கள் அறிவாலும் உணர்வாலும் ஆழப்படுகிறார்கள். அறிவுசிலநேரங்களிலேயேவேலைசெய்யும்,அனேகமானநேரங்களில் உணர்ச்சியேஆதிக்கம் செலுத்தும். உணர்ச்சியைஆற்றுப்படுத்த,ஒழங்குபடுத்தநல்ல இலக்கியங்கள்,கலைப்படைப்புகள் நிச்சயம் உதவும். எனவேஉணர்ச்சியின் குழந்தைகளானமக்கள் இலக்கியகலைப்படைப்புகளைநாட்டங் கொண்டுஃஅவற்றைநுகர்ந்துஃபகிர்ந்துதமதுவாழ்வைசீர்மைப்படுத்தமுடியும். இதற்கு முயல வேண்டியதுஅவர்களின் பொறுப்பும் ஆகும்.
16. இளங்கவிஞர்களில் ஒருவர் நீங்கள் என்றவகையில் இன்றைய இளங்கவிஞர்களுக்குஎன்ன கூற விரும்புகிறீர்கள்?
மேலுள்ள இரு கேள்விகளுக்குமானஎனதுபதிலேஅதற்குமானஎனதுபதிலாகும்.
17. கவிதைத் துறையைத் தவிரஉங்களதுவேறுபக்கங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்
பாடசாலைக் காலத்தில் ஓவியத்துறை,விளையாட்டுஎன்பவற்றில் ஈடுபாடு இருந்ததுதற்போதுகுறைவு. தற்போது இசைத்துறையில் எனக்குமிகுந்தஈடுபாடுஉண்டு. நான் இசைஞன் அல்ல. இசை இரசிகன். இசைநாட்டம் என்னில் பலமாற்றங்களைஏற்படுத்தியதுஎன்றால் மிகையில்லை.
18. வெகுஜன ஊடகங்களின் பாதிப்புமுனைப்புபெற்றிருக்கும் இக்காலகட்டத்தில் ஒருகாத்திரமானபடைப்பாளிஎவ்வாறுதனதுஎழுத்துப்பணியைமுன்னெடுக்கவேண்டும்?
ஊடகங்களைநம்பிப் படைப்பாளன் இருக்கமுடியாது. இருக்கவும் கூடாது. உண்மையானகாலக்கண்ணாடியின் படைப்பாளனைத் தேடிஊடகங்கள் கண்டிப்பாகவரும். ஆனால் உலகமயமாதலின் பின் ஊடகங்களின் ஆதிக்கம் எல்லைமீறியபின் ஊடகங்களைதிருத்திப்படுத்தஅவர்களுக்குஏற்றபடைப்புகளைபடைப்பவர்களும் காணப்படுகிறார்கள். இவர்களையேஊடகங்கள் அளவுக்குஅதிகமாகமுன்னிலைப்படுத்துகின்றன. இவ்வாறானபடைப்புக்கள் காலத்தால் வாழாதுசிதைவடைந்துவிடும். காலம் கடந்துவாழும் படைப்புகளைஎன்றென்றும் ஊடகங்கள் உரியமரியாதயுடன் தான் பயன்படுத்தும்.
19. பொதுவாழ்க்கையில் உங்கள் ஈடுபாடு?
எனதுதொழில் நிர்வாகத்துறை. இதுபொதுவாழ்க்கையுடன் தொடர்புபட்டபொதுச்சேவை. இதில் தினமும் ஈடுபடுகின்றேன். மக்களுக்குதானே,மக்களுக்காகத் தானேஎதுவும்? இலக்கியங்களும் மக்களுக்கானவையே!எனவேமக்கள் சேவையில் ஈடுபடுவதால் மக்கள் வாழ்வின் பலபரிமாணங்களை,மக்களின் இன்னோரன்னபிரச்சினைகள்,தேவைகள்,அவர்களின் எதிர்பார்ப்புக்களைபுரிந்துகொள்ளக் கூடியசந்தர்ப்பம் கிடைகிறது. இது என் இலக்கியபார்வையை,படைப்புபணியைமேலும் விரிவாக்கி இருக்கிறது.