நிதமுமொரு ஏவுகணைப் பரிசோதனை நடாத்தி
உலகப்போர் நெருப்புக்கு
நெய் ஊற்றும் ‘கிம் ஜொங் உன்’.
கண்டனமும் தொடர்ந்து கவலையும் தெரிவித்து
நாசகாரி கப்பல்கள் நகர்த்தி மிரட்டும் ‘டிரம்ப்’.
நவீன இனச் சுத்தி கரிப்பாய்
மனிதத்தை
குருதிக் கடலுக்குள் மூழ்கடிக்கும் ‘ரோஹிங்யா’.
கைதின்பின் முப்பதுயிர் கருகவைத்த
சாமியார்
‘குர்மித் ராம் ரஹீம் சிங்’.
ஊடக சுதந்திரத்தின்
அண்மைய கழுத்தறுப்பாய் சுடப்பட்ட ‘கௌரி லங்கேஷ்’.
‘அனிதா’ வின் அழிந்த ஆசை,
‘நீட்’ தேர்வு முறை,
‘எடப்பாடி– பன்னீர்’ இணைவு,
‘பிக் பாஸ்’ கொடுமை.
பேய்க்காட்டி விவேகமென பணம் பிடுங்கும் பொய்சசினிமா.
நாகத்தை, பேய்களினை
வீட்டுள் கூட்டி வரும் tv.
புயல் வெள்ளப் பெருக்கு , ‘blue whale’ விபரீதம்.
உள்ளூரில்….
‘நீதி பதிக்கே’ குறிவைப்பு,
‘துன்னாலைச்’ சூடு,
அனுமன் வாலாய் நீளும்
‘வித்யா ‘ வழக்கு.
நித்தமும் உயிர் குடிக்கும் ‘ரயில்’,
பிறந்தநாள் கொண்டாடி பிணமான ‘ஆறு பூக்கள்’,
மாகாண சபை அமைச்சர் மாற்றம்,
‘அரசியல்
திட்ட வரைபு’, இடறும் ‘இருபதாம் திருத்தம்’,
போர்க்குற்ற விசாரணை,
புதிய அரசியல் கூட்டு,
‘ஜெகத் ஜெயசூரியா’, ‘பொன்சேகா’, ‘கோத்தா ‘,
‘கேரள டயரீஸ்’ கிளப்பிய புதுவம்பு,
‘காரைநகர்’ தாயின் வீட்டு ஈடு,
அதன் மீள்வு,
மருத்துவத் தவறு மாய்த்த கிழக்கினது ‘இளம் தாய் சேய்’.
‘அமீரின்’ தொண்ணூறாம் நினைவுப் பரபரப்பு.
இப்படி….நிதம் சிலந்தி வலைகள்
நமைஇறுக்க
எப்படித்தான் சிக்காமல் நகரும்
நிம்மதி வாழ்வு ?