வீராப்பு 

 
 
நீதியெது நியாயமெது தெரிகிறதா நாளும் ?
நீங்காத சோகம் நம் நெஞ்சிலிடும் கோலம்!
சாதியினால் சமயத்தால் சாகவில்லை ஓலம் 
சாத்தான்கள் கருவறையில்….மனிதமதா வாழும் ?

 
நீடித்து நிம்மதியின் நீழல் விழவில்லை.
நெருப்பெறியும் வெயில் போக்க நிவாரணமும் இல்லை.
சோடித்த சவம் போல் நாம்….வாழ்விலுயிர்ப் பில்லை 
சோற்றுக்கும் அழுவதனால் சுதந்திரமும் இல்லை.
 
எவ்விடமும்  இருபிரிவாய்….இரண்டாகி வாழ்வோம் .
இவர்தீர்க்க  அவர்மறுக்க முடிவிலெதும் காணோம்.
எவ்வளவு செங்குருதி….எதை அதில் வளர்த்தோம்?
இறப்புக்கு பரிகாரம் எது செய்து  யிர்த்தோம் ?
 
கட்டுக்குள் நன்னெறியில் வாழ்ந்த தமிழ் வாழ்வு 
கட்டறுந்த தின்று…எங்கு காணினிலும் தாழ்வு!
செட்டோடு தலைநிமிர்ந்த சீவியமும் போச்சு 
சென்று தேய்ந்திழிகையிலும் வீராப்பாய் பேச்சு!
This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply