சிறியனும் பெரியனும்

“யான்பெரியோன் என்ற ஆணவம் அழித்துவிட்டு
வாழும்” என்று சொல்கின்றீர்!
எனைச்சுற்றி வாழ்பவர்கள்…
தாம்பெரியோர் என்ற மமதை
கொண்டலைகையிலே.,
தாம்உயர்ந்தோர் என்ற
தலைக்கனத்தோ டுலைகையிலே.,
யாரையும் சிறுபுழுவாய்…
அற்பப் பதர்களுமாய்…
நோக்கித்தாம் மகுடம் சூடியதாய்த்
துள்ளையிலே…
‘ஏனையோர் சகலரையும்’
புறக்கணித் தொதுக்கையிலே…
ஆதிக்கம் புரிந்து அடக்கத் துணிகையிலே…
நான்மட்டும் எனைத்தாழ்த்தி
அவர்ககடிமை யாகலாமோ…?

யாவும் புரிந்த,
யாவையையும் இயக்குகிற,
அண்டவன்முன்@
இந்த இயற்கையின்முன்@
அறத்தின்முன்@
“நான்சிறியன், கடையன்” எனயான்
உணர்கின்றேன்.
ஆணவத்தை அவர்கள்முன்
ஆழித்தெனைநான் அற்பனென்பேன்.
ஆனால் ‘எதுவுமற்றும்’
தாம்பெரியோர் என்றோதி
ஆயிரம் நெறிஅறிந்தும்…ஆணவம்அழிக்காமல்
யாரையும் எடுத்தெறிந்து
தம்நலனே பெரிதென்னும்
மானிடர்முன்…நான்பணியேன்!
நான்சிறியன் எனஉரைக்கேன்!
யான்அவர்முன் என்ஆற்றல் நிரூபிப்பேன்
தலைநிமிர்வேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply