நாவல் ஆச்சி

நாவற் பழங்கள் நம் ஊரின் ‘பெரி’ப் பழங்கள்.
நாவற் பழங்கள்
நம் தமிழின் ருசிப்பழங்கள்.
நாவற் பழத்துக்கும்
நம் ஆச்சி மாருக்கும்
யாது தொடர்பு..நம் ‘ஒளவை’ முதற்கொண்டு ?
பார்த்தேன் யான்…
நாவல் நிற இரத்தினக் கற்கள்
போலே….கடகமுட்டப் பொலிந்து
‘சுண்டொன்று’
நாற்பது ரூபாவாய் …நாவூற விற்றிருந்தாள்
ஆச்சி ஒருத்தி!
அன்றுமொரு நாள்…வேறு
ஆச்சிதான் விற்றிருந்தாள்!
முன்பு ‘சுட்ட சுடாத பழம்’
வேணுமா எனக்கேட்டு வில்லங்க படுத்திய
‘ஞானப் பழக்குமரன்’ தன்னைப்
பழிவாங்க
காத்திருக்கும் ‘ஒளவையை’
கண்டேன் இவ் ஆச்சிகளில்!
நாவற் பழத்துக்கும் நம் ஆச்சி மாருக்கும்
யாது தொடர்பு..நம்
தமிழின் வரலாற்றில்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply