காற்று

அனாயச மாக அசைகிறது காற்று.
அதீத அழகின்றி
ஆர்ப்பாட்டம் எதுமின்றி
ஆக்ரோ~ம் இன்றி
அதிரும் நடையுமின்றி
ஆடம் பரங்கள் அணுவுமின்றி
மிக மெதுவாய்,
தேவதை ஒருத்தியாய்,
அவளின் துகிலசைவாய்,
பூக்களெலாம் ஒத்தடம் கொடுக்க
வலிகளைந்து
அனாயச மாக அசைகிறது காற்று.
திவ்ய நறுமணத்தைத் திசைகளின்மேற் பூசி
அவ்வளவு ஆறுதலாய்
அத்தனை மிருதுவாய்
எவ்வளவு இதமாய் எமைவருடிப் போகுதிது?
மஞ்சள் வெயிலில்
மினுங்கும் இலைக@டும்,
கொஞ்சமும் அசையாக் கிளைமேலும் நகர்கிறது.
கண்மூடி இந்தக் காற்றை
இரசிக்கின்றேன்.
நெஞ்சாரக் காற்றின் இதத்தை
நுகர்கின்றேன்.
என்மேனி பரவசிக்க எனைமறந்தே
நிற்கின்றேன்.
கையை விரித்து வரும் காற்றை
அளைகின்றேன்.
கைகளிலே சிக்கிடுது…
காற்றில் மிதந்துவந்த
பெயரறியாப் பறவைகளின்
குருதிகாயாச் சிறகுகள்..!.
ஊயிர்பிரிந்து அனாதையான
சூடகலா மூச்சுக்கள்..!
அனாயச மாகக் காற்றசைந்து போகிறது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply