சுற்றும் புவி

தனியொரு வனுக்கு உணவு இங்கு இல்லை
எனிலோ…ஜெகத்தை
எரிக்க எந்த பாரதியும்
இல்லாச் சமூகத்தில்….
உணவற்று வாடி எங்கோ
உள்ளதில் ஒருகவளம் திருடி உண்டு,
பசிதணித்து,
நிம்மதியின் ஒரு வீதம் முகத்தில்
படர்ந்திருக்க
நின்றவனை கையும் களவுமாய் பிடித்து
அடித்தே
கொன்று;
அவனைக் கொளுத்திய வெளிச்சத்தில்…..
கோடி கோடி ஊழல் செய்து
கொழுத்து …இந்த
மானிட இருண்மைக்குள் மறைந்துலவும்
இலட்ச இலட்ச
முதலைகளின் முகங்கள்
முழுமதிகள் போல்த் தெரியும்!
எது நீதி நியாயமென்றும்,
எது தர்மம் அதர்மமென்றும்,
சரி பிழைகள் பாவம் பழி
எவைகள் தானென்றும்
புரியாப் புவி இன்றும்
தலை சுற்ற தான் சுற்றும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply