ஆஷிபா

சிறுமியின் கருவறைக்கும்…
தங்கள் மதச் சாதிச்
சிறுமியின் கருவறைக்கும்…வேறுபாட்டை
தேர்ந்துகொள்ள
கருவறையைப் பாவித்தார் காவாலிகள்!
எட்டுத்
தினங்களாய்…எட்டு வயது
மலரா மொட்டை
புணர்ந்து பிணமாக்கி நரவேள்வியே….கர்ப்பக்
கிருகத்தில் செய்தார்!
கோவிலில் சுடலை வைத்தார்!
தெரிந்தும் அங்கிருந்த தெய்வம்
இத்தீட்டை
மறைத்து, தடுக்க எதும் செய்யாது,
இதற்குதவி
உறைந்து கிடந்ததுவா?
தொடர் நீலப் படம் பார்த்து
மயங்கியதா?
மனிதப் பேய்களினை வெல்ல
முடியா தொளிந்ததுவா?
இல்லை இதைக்கண்டே
உயிரினையும் விட்டதுவா?
உயிர் வலிக்கக் கேட்கின்றேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply