ஞானம்

கோவிலடி வீதியில் கை கூடியது ஞானம்.
கொல்லையடி மீள்கையில் உள் ஊறியது ஈனம்.
பாவமனம் பம்மியது ஆண்டவன் முன் தானும்.
பம்மியது பாய்ந்தது தன் இலாபம் வரும் நேரம்.

ஆசையெனும் மாடிழுக்க ஓடும் வண்டி…வாழ்வு.
அச்சு அதன் சக்கரத்துக்கு ஆகும்… உயிர் மூச்சு!
சோடனைகள் வேடங்களுக்கு இல்லையிங்கு குறைவு.
சொர்க்கவழி நரக வழி யாது? உரைப்பர் தெளிவு?

எந்த நொடி மூச்சினச்சு உடையும்? சக்கரங்கள்
எந்த நொடி களரும்? வண்டி எந்த நொடி சிதையும்?
எந்த நொடி எது நடக்கும் யாரறியக் கூடும்?
இதுள் இலாபம் தேடும் மனம்….எதில் பட்டுத் தெளியும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply