கூடியிருந்தே மனது…குலவுகிற வாழ்வும்
கோவிலிலே விளைந்து நீதி சொலும் ஆழ்வும்
தேடி அலையாமல் எமை சேருகிற காசும்
தேகமதில் நோய்களற்ற நாளும்….வரமாகும்!
அந்தரங்கள் ஏதுமற்ற ளந்து விடும் மூச்சும்
ஆரும் விழியாலுறுக்க….ஆடிவிழா பேச்சும்
சொந்தமதன் ஒத்துழைப்பும், சுற்றம் தரும் சீரும்,
தோற்று எழுந்தோங்கும் உளமும்…,வரமே ஆகும்!
தீவுகளென் றாகித் தனித்தே இருக்கும் உறவு,
தீர்வுகளைத் தேடவில்லை…பூணும்…உய்ய துறவு!
வேர் பிடித்த வாழ்வில் விழுதுகளற்ற நனவு
வேதனையை கூட்டிவரும் …..காணும் புது கனவு!
கட்டறுந்த காற்றெனவே வாழும் வரம் தேடு!
காசு பணம் நாடி…சுகம் சாகவிடல் கேடு!
பட்டினியில் ஐந்து புலன் ஏங்கி அழும் போது
பாடையினில் ஏற்றி விடல் பாவம்….வழி காணு!