இருட்டுள்தான் இருக்கின்றோம் எல்லோரும்;
கருவறைபோல்
இருட்டுள் தான் இருக்கிறது எவ்விடமும்;
காலந்தான்
ஒளிமுதலாம் சூரியன்!
அதுதான் எவரெவரில்
ஒளியைப் பரப்பிடுதோ….
அதன் ஒளி எவ்விடத்தில்
படுகிறதோ….
அவரவரும் அவையவையும் பகல்போல
தெரியும் உலகினுக்கு!
திடீரென்று கால ஒளி
வேறெவரில் பட்டாலோ
விதி மாறும் அவரவர்க்கு!
காலத்தின் ஒளி என்றும் படவேண்டும்
என வலிந்து
மாதவங்கள் புரிவோம் நாம்….
என்றென்றும் ஒளிர்வதற்கு!