எங்கள் செயல்கள் எவையெவையோ
அவையவைக்கு
எங்கோ வரவு செலவுக் கணக்குக்கள்
சற்றும் பிழைக்காமல்
பதிவுசெய்யப் படுகிறது!
குற்றம் குறை சரிகள்
குறித்துவைக்கப் படுகிறது!
“எங்களது வல்லமையால்…
எங்கள் திறமையினால்…
எங்கள் கண், கை, வாயால்
எவரினையும் நாம் ஏய்த்து
வென்றோம்” என நிமிர்வோம்….
ஆனாலும் விதி என்றும்,
காலமென்றும்,
எங்கோ பார்க்கப் படும் கணக்கை….
‘காலக் கணக்காய்வாளர்’
‘சித்ர புத்ரனார்’
போடும் ‘ஐய வினாக்களினை’
“புரியவில்லை” என்றபடி
யாருமே தப்பிவிட முடியாது!
நம் கணக்கிற்கு
ஏற்ற பதில் கூறாமல் ஏய்ப்பின்…
எழும் உடன் தீர்ப்பு!