ஆச்சரியக் கடல்

ஆயிரம் ஆயிரம் அலைச்சிறகு அடித்தடித்து
வானுக்கும் மண்ணுக்கும் இடையே
நிதம்பறந்து
எங்கேதான் போகிறதோ
கடலென்னும் இப்பறவை?
எங்கே இருக்கிறது
இதன்கூட்டைக் கொண்ட கிளை?
குயில்களது கூவல்போல்
இதனின் தொடர்கூவல்
அயலெங்கும் கேட்டிடுது. அனைத்தும் அதிர்கிறது.
தீக்கோழி,
தீயில் இருந்துயிர்த்துப் பறந்துபோகும்
பீனிக்ஸ்,
மழையுண்ணும் சக்கர வாகம்..,என்று
வௌ;வேறு இயல்புள்ள பறவைகளைப் போல்;;..
இதுவும்
எவ்வாறோ உருவாகி
எம்முன் பறந்திருக்கு.
இத்தனை பெரிய
இராட்சதப் பறவையிட்ட
முட்டையோ நிலவென்று?
முன்னிருந்த என்பிஞ்சு
கேட்டாள் ஒருகேள்வி…
கற்பனையின் ‘அடுத்தகட்டம்’
கேட்ட அவளிடத்தில் உயிர்த்ததனைக்
கண்டயர்ந்தேன்.
ஆச்சரியம் மனித ஆற்றல்..
இதை ஏற்கின்றேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply