உயிரின் வலி

கத்தியைக் கொண்டும்
சவர அலகுகொண்டும்
குத்தூசி கொண்டும்
முட்கம்பியைக் கொண்டும்
சித்திர வதைசெய்த வலியின்கொடுமையினை
சற்றுமுன் முள்ளொன்று
காலைத் துளைத்தகணம்
உணர்ந்து துடிதுடித்தேன்!
உயிர்போயே மீண்டதப்போ!
ஒவ்வொரு கலமும் ஓவ்வொரு நரம்புகளும்
ஒவ்வொரு தசைநாரும்
உயிரின்ஒவ் வொரணுவும்
எத்தனை பாடுபட்டு இறப்பில்
அமைதியினைப்
பெற்றிருக்கும்?
பிணத்தில் எத்தனை காயங்கள்?
செத்த பிணத்தில்
விடிவு கிடைத்ததுபோல்
பரவிக் கிடந்த தமைதி!
உயிர்துடித்த
வலியும் உயிரோடா
உடலைவிட்டுச் சென்றிருக்கும்?
உயிர்துடிக்கும் நோவை உணராமல்
உயிர்பறிப்போர்
உடலும்…
உயிர்வலியை அனுபவிக்கும் தண்டனையை
இயற்கை வளங்கிடுதோ
எவர்க்கும் விளங்குதில்லை!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply