எனது சொந்த விருப்பு வெறுப்புக்காய்,
எனது நட்டம்
இலாபம் இவற்றுக்காய்,
என்னுடைய நன்மைக்காய்,
என் தப்பிப் பிழைப்புக்காய்,
என் சுய நலனுக்காய்,
எனது அரசியலுக்காய்,
நடுநிலை தவறி….நன்நெறியினை விலத்தி…
அடாத்தாய்ப் பொருதி…
அபாண்டப் பழி சுமத்தி…
படு பொய்யே பேசி…
பரிகசித்தும் தூற்றி…
கடைநிலைக் கிறங்கி…
யான் வெற்றி கண்டாலும்..,
‘கெடுவேன் நான் அதால்’ என்ற
கீதையை உணர்ந்ததனால்…
நடுநிலை தவறாமல்
நடக்க நினைக்கின்றேன்!
தடைகள் வரும் அதற்கும்
தாண்ட முயல்கின்றேன்!
15.12.2018