ஆதிக்கம்

வங்கக் கடலில் தாழமுக்கம் தோன்றிவிட்டால்
இங்கே…வடகிழக்கில்
எப்படியும் மழையடிக்கும்.
அங்கே ஒருதாக்கம் ஏற்பட்டால்
அடுத்தகணம்
இங்கும்அதன் பாதிப்பு இருக்கும்.
பருவகாலம்
இங்கொன் றருந்தாலும்
அங்குதோன்றும் தாழமுக்கம்
எங்கள் மழைவீழ்ச்சி
தனைக்கூட்டும், குறைத்துவிடும்!
அங்கே முகில்திரள இங்கே குளிரடிக்கும்.
அங்கே வெளிப்பென்றால்…
இங்கும் வெளித்திருக்கும்.
எங்க@ர்க் கெனவுமோர்
வானிலை இருந்தாலும,;
எங்களுக் கென்றோர்
பருவக்காற் றடித்தாலும,;
எங்கள் மழையைமட்டும் அல்ல
எம்வாழ்க்கையிலும்
வங்கக் கடலேன்
செல்வாக்குச் செலுத்தஏங்கும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply