உலகு

நீயுந்தான் சூழல், நினது சிறு நட்பு வட்டம்,
சேர்ந்த குழுமம்,
சிலிர்த்து வாழ்த்தும் சுற்றத்தார்,
சூழ ஒரு உலகத்தை சிருஷ்டித்து
அது ஒன்றே
மாபெரும் உலகமென வாதிடுவாய்!
வேறொருவன்
தான் கண்ட நிலமே
தனது பெரும் உலகென்பான்!
நானும் அதுபோலே நம்புகிறேன்
ஒரு உலகை!
நீயும், அவனும், இங்கே
நானும் எமக்குள்ளே
காணும், அனுபவிக்கும்,
கருத்து வேறுபாட்டோடு
உலகமென்று நம்புவது மட்டுமா உலகம்?
இந்த
உலகங்களைத் தாண்டியும்
உள்ளதடா பேருலகம்!
இதையறியாப் பேதைகளாய் இடிபட்டோம்!
எங்களையும்
கடந்து பல உலகிருக்கு
கண்டால்…..
நம் ‘நிலை’ உணர்வோம்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply